சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்ந்தன: பார்தி இன்ஃப்ராடெல் எண்டிபிசி உயர்வை சந்தித்தன

சென்செக்ஸ் 137 புள்ளிகள் அதிகரித்து 38,524 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 45 புள்ளிகள் அதிகரித்து 11,550 புள்ளிகள் அதிகரித்துள்ளன. 

மும்பை பங்குச் சந்தையில் 15 துறைப் பங்குகள் உயர்வான வர்த்தகத்தை எதிர்கொண்டுள்ளன.

இந்தியப் பங்குச் சந்தை (சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி) ஆதாயத்தை அடைந்தது. லார்சன் & டர்போ, எச்டிஎஃப்சி, ஐடிசி, எண்டிபிசி, மற்றும் எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை ஆதாயத்தை அடைந்துள்ளது. சென்செக்ஸ் 137 புள்ளிகள் அதிகரித்து 38,524 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 45 புள்ளிகள் அதிகரித்து 11,550 புள்ளிகள் அதிகரித்துள்ளன. 

1. காலை 9:23 மணியளவில் சென்செக்ஸ் 0.21 சதவீதம் அல்லது 79 புள்ளிகள் அதிகரித்து 38,466 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 0.29 சதவீத அல்லது 34 புள்ளிகள் அதிகரித்து 11,555 புள்ளிகளில் உள்ளது. 

2. ஓஎன்ஜிசி, டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், மாருதி சுசுகி, மஹிந்திரா & மஹிந்திரா எச்.சி.எல் டெக்னாலஜி ஆகியவை அழுத்தத்தை சந்தித்துள்ளன. 

3. மும்பை பங்குச் சந்தையில் 15 துறைப் பங்குகள் உயர்வான வர்த்தகத்தை எதிர்கொண்டுள்ளன. டெலிகாம் பங்குகள் 1.9 சதவீதம் ஆதயத்தை அடைந்தது. கேபிடல் குட்ஸ், பவர், யுடிலிட்டிஸ் பங்குகள் 0.9 மற்றும் 1.3 சதவீதம் உயர்ந்துள்ளது. 

4. மற்றொரு புறம் மும்பை பங்குச் சந்தையில் உள்ல ஐடி பங்குகள் சரிவை சந்தித்தன. 0.51 சதவீதம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. எனர்ஜி மற்றும் ஆயில் & கேஸ் பங்குகளின் வர்த்தகம் குறைந்துள்ளது. 

5. இந்திய ரூபாயின் மதிப்பு 0.35 சதவீதம் உயர்ந்து அல்லது 24 காசுகள் உயர்ந்து 68.60 ஆக உள்ளது.  

6. மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் பங்குகள் 0.53 சதவீதம் உயர்ந்தது. 

7. நிஃப்டியில் 34 பங்குகள் முன்னணியிலும் 16 பங்குகள் சரிவையும் சந்தித்துள்ளன. பார்தி இன்ஃப்ராடெல் ஆதாயம் பெற்ற நிறுவனங்களில் முன்னணியில் உள்ளன. இதன் பங்குகள் 3 சதவீதம் அதிகரித்து ரூ. 344 ஆக உள்ளது. லார்சன் & டர்போ, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், யெஸ் பேங்க், டைட்டன், எண்டிபிசி, மற்றும் ஜேஎஸ்டபுள்யூ ஆகியவை ஆதாயத்தை அடைந்துள்ளன. 

8. மற்றொரு புறம் ஜீ எண்டர்டெயின்மெண்ட், ஓஎன்ஜிசி, அதானி பார்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுசுகி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன. 

9. ஒட்டு மொத்தமாக 1,017 பங்குகள் நேர்மறையாக உள்ளது. 643 பங்குகள் சரிந்துள்ளன. 

10. அந்நிய முதலீடுகள் 1,771.61 கோடியாக உள்ளது என தேசிய பங்குச் சந்தை தகவல் தெரிவித்துள்ளது.