This Article is From Mar 28, 2019

சென்செக்ஸ் நிஃப்டி உயர்வை சந்தித்தன : ஐடி பங்குகள் ஆதாயத்தை அடைந்தன

நிஃப்டியில் அதிகபட்ச ஆதாயத்தை பெற்ற நிறுவனமாக ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்  உள்ளது. இதன் பங்குகள் 2.91 சதவீதம் உயர்ந்து ரூ. 1, 073 ஆக விற்கப்படுகிறது. 

சென்செக்ஸ் நிஃப்டி உயர்வை சந்தித்தன : ஐடி பங்குகள் ஆதாயத்தை அடைந்தன

Sensex Today: சென்செக்ஸ் 0.29 சதவீதம் அல்லது 112 புள்ளிகள் உயர்ந்து உள்ளது.

இந்தியப் பங்குச் சந்தை இன்று உயர்வை சந்தித்துள்ளது. ஹெச்சிஎல் டெக்னாலஜி, வேதாந்தா, எண்டிபிசி, டாடா கன்சல்டன்சி சர்வீஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆதாயத்தை அடைந்துள்ளது. மற்றொருபுறம் எச்டிஎஃப்சி பேங்க், ஓ என் ஜிசி, இண்டஸ்இண்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ் மற்றும் பார்தி இன்ஃப்ராடெல் ஆகியவை வர்த்தகம் தொடங்கிய முதலே அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 0.29 சதவீதம் அல்லது 112 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 0.3 சதவீதம் அல்லது 34 புள்ளிகள் அதிகரித்து 11,479 புள்ளிகளில் உள்ளது. 

மும்பை பங்குச் சந்தையில் டெலிகாம் இண்டெக்ஸ் வர்த்தகம் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ரியால்டி இண்டெக்ஸ் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐடி, நுகர்வோர் பயன்பாட்டு பொருட்களின் இண்ட் டெக்ஸ்  0.3 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 

பி எஸ் இ யின் மிட் கேப் இண்ட்டெக்ஸ் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது. பி எஸ் இயின் ஸ்மால் கேப் இண்டெக்ஸ் 0.54 சதவீதம் அதிகரித்துள்ளது. 

நிஃப்டியில் 27 நிறுவனப் பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ளன. 23 நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. 

நிஃப்டியில் அதிகபட்ச ஆதாயத்தை பெற்ற நிறுவனமாக ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்  உள்ளது. இதன் பங்குகள் 2.91 சதவீதம் உயர்ந்து ரூ. 1, 073 ஆக விற்கப்படுகிறது. 

டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், ஜீ எண்டர்டெயின் மெண்ட்ஸ், இன்ஃபோசிஸ் டாடா கன்சல்டன்சி சர்வீஸ், யெஸ் பேங்க் ஆகியவை ஆதாயத்தை அடைந்துள்ளது. 

மற்றொரு புறம் ஓ என் ஜிசி, பார்தி இன்ஃப்ராடெல், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஜெ எஸ் டபுள்யூ ஸ்டீல், பவர் கிரிட், கோல் இந்தியா, இண்டஸ்இண்ட் பேங்க் சரிவை எதிர் கொண்டன

.