Profit

250 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது சென்செக்ஸ்

இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டர்ஸ், ஆகியவை நிஃப்டியில் லாபம் ஈட்டின.

 Share
EMAIL
PRINT
COMMENTS
250 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது சென்செக்ஸ்

வர்த்தகமானது 1.1 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை உயர்ந்தது.


வர்த்தக நாளின் தொடக்கமே  ஆதாயத்திற்கான குறிப்புகளுடன் தொடங்கியது. அமெரிக்க -சீனா வர்த்தக உறவின் முன்னேற்றமும் இதற்கு காரணியாக அமைந்தது. மும்பை பங்குச் சந்தை 269 புள்ளிகள் உயர்ந்து 36,250 புள்ளியாக அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 66.95 புள்ளிகள் உயர்ந்து 10,869 புள்ளியாக அதிகரித்தன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டர்ஸ், ஆகியவை நிஃப்டியில் லாபம் ஈட்டின. வர்த்தகமானது 1.1 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை உயர்ந்தது. 

புதன்கிழமையான இன்று ஆசிய சந்தைகள் முழுவதும் லாபம் ஈட்டியுள்ளன. காலை வர்த்தகத்தில் ஹாங்காங் 2.4 சதவீதமும் ஷாங்காய் 1.6 சதவீதமும் உயர்ந்தன.  டோக்கியோ 1.3 சதவீதம் சரிவை சந்தித்தது. 

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் 3வது வாரமாக முன்னேறிய நிலையில் விற்பனையாளர்கள் மத்தியில் நேர்மறையான மனநிலை உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  சீனா,அமெரிக்கா பேச்சுவார்த்தை “மிகவும் நன்றாக” போவதாக விவரித்தார் என செய்தி நிறுவனமான ஏஃப்பி தெரிவித்துள்ளது.

நேற்று வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 35,980 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி   30 புள்ளிகள் அதிகரித்து 10,802 ஆக முடிவடைந்தது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top