Profit

சென்செக்ஸ் 675 புள்ளிகள் சரிந்தன; நிஃப்டி 10,800 புள்ளிகளாக சரிந்தன

மும்பை பங்குச் சந்தையில் 19 துறைகளில் 17 துறைகள் சரிந்தன. மெட்டல் இன்டெக்ஸில் கிட்டத்தட்ட 3 சதவீத வீழ்ச்சியில் குறைந்த வர்த்தகத்தில் உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 675 புள்ளிகள் சரிந்தன; நிஃப்டி 10,800 புள்ளிகளாக சரிந்தன

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகியுள்ளது.


வர்த்தக யுத்தம் காரணமாக முதலீட்டாளர்கள் பாரம்பரிய பாதுகாப்பான முதலீடுகளான தங்கம், யென், பாண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்தனர். மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 525 புள்ளிகள் வரை சரிந்து 36,593.32 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 10,850 ஐ விட சரிந்தது. 

காலை 9:22 மணியளவில் சென்செக்ஸ் 473 புள்ளிகள் அல்லது 1.27 சதவீதம் சரிந்து  36,645.09 புள்ளிகளில் இருந்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 149 புள்ளிகள் அல்லது 1.35 சதவீதம் சரிந்து 10,848 ஆக இருந்தது. 

மும்பை பங்குச் சந்தையில் 19  துறைகளில் 17 துறைகள் சரிந்தன. மெட்டல் இன்டெக்ஸில் கிட்டத்தட்ட 3 சதவீத வீழ்ச்சியில் குறைந்த வர்த்தகத்தில் இருந்தது.

மறுபுறம் தகவல் தொழில்நுட்ப குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகியுள்ளது.

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்திய அரசு விதித்துள்ள கடுமையான வரி விதிப்புகள் அந்நிய முதலீட்டாளர்களை இம்முடிவுக்கு தள்ளியுள்ளது. எஃப்.பி.ஐக்கள் ஜூலை மாதத்தில் 12,418.73 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top