RBI -இன் ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: குறைவான வளர்ச்சி விகிதமே கணக்கிடப்பட்டுள்ளது

The repo rate - ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு அதன் முக்கிய வட்டி விகிதத்தை 5.15 சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது

மொத்த நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

ஹைலைட்ஸ்

  • RBI maintained repo rate at 5.15%
  • Inflation breached RBI's medium inflation target of 4% in October
  • RBI cut GDP forecast to 5% from 6.1% for current financial year

அக்டோபர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு அதன் முக்கிய வட்டி விகிதத்தை 5.15 சதவீதத்தில் எந்த மாற்றமும்  இல்லை என்று அறிவித்துள்ளது. வளர்ச்சியை புதுப்பிக்க கூடிய வகையில் இடவசதி நிலைப்பாட்டைத் தொடரவும் நாணயக் கொள்கை குழு முடிவு எடுத்துள்ளது. 

அதே நேரத்தில் பண வீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் பணவீக்க இலக்கை திருத்தி வளர்ச்சி கணிப்பை குறைத்தது. நடப்பு நிதியாண்டின் பணவீக்கம் இரண்டாம் பாதியில்  5.1-4.7 சதவீதமாகவும் 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் 4.0-3.8 சதவீதமாகவும் வளரும் என்று மத்திய வங்கி எதிபார்க்கிறது. 

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது மொத்த நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. அக்டோபர் கொள்கையில் 6.1 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. 

More News