சேவைத்துறையின் தேவைகளும் சரியத் தொடங்கின : சர்வே கூறும் தகவல்கள்

அடுத்து வரும் ஒரு வருடமும் கடந்த இரண்டரை ஆண்டுகளை விட சரிவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைத்துறையின் தேவைகளும் சரியத் தொடங்கின : சர்வே கூறும் தகவல்கள்

செப்டம்பர் மாதத்தில் சேவைகளுக்கான ஒட்டுமொத்த தேவை 48.8 ஆக குறைந்தது.

BENGALURU:

2018 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல்  சேவைத் துறையின் தேவைகளும் சரிந்து வந்துள்ளதாக தனியார் கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இரண்டரை ஆண்டுகளில் வணிக நம்பிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

ஏப்ரல் மற்றும் ஜூன் காலாண்டில் வளர்ச்சி ஆறு ஆண்டுகளை விட சரிந்துள்ளது. பொருளாதார மந்தம் விரிவடைந்து வருவதையே அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஐ.எச்.எஸ் மால்கிட்  சர்வீசஸ் கொள்முதல் மேலாளர்களின்  குறியீடு ஆகஸ்டில் 52.4 ஆக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் 48.7 ஆக சரிந்துள்ளது. 

இந்திய பொருளாதாரம் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. பலவீனமான உற்பத்தி மற்றும் மோசமான சேவைத்துறையின் செயல்பாடு பிப்ரவரி 2018 முதல் நிஃப்டியில் அதன் மதிப்பை 50க்கும் குறைவாக உள்ளது. மேலும் சேவைத்துறையின் தேவைகள் உடனடியாக ஏற்றம் பெறும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. செப்டம்பர் மாதத்தில் சேவைகளுக்கான ஒட்டுமொத்த தேவை 48.8 ஆக குறைந்தது. 

 நிதிக் கொள்கை வகுப்பவர்கள் வளர்ச்சியை புதுப்பிக்க நிதி மற்றும் பண ஊக்கத்தை அதிகரிக்க தூண்டுகிறது. ரிசர்வ் வங்கியின் ஆதரவான நடவடிக்கைகள் இருந்த போதிலும் அவை உடனடியாக சேவைத்துறையை சரிவிலிருந்து மீட்பதற்கான நம்பிக்கை இல்லையென கணக்கெடுப்பு காட்டுகிறது. 

அடுத்து வரும் ஒரு வருடமும் கடந்த இரண்டரை ஆண்டுகளை விட சரிவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்ளீட்டுச் செலவு பணவீக்கத்தின் வீழ்ச்சி மூன்று ஆண்டுகளின் வீழ்ச்சி. வட்டி விகிதத்தில் மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பை எழுப்பியுள்ளது”

உள்ளீட்டு செலவுகள் இரண்டரை ஆண்டுகளில் மிக மெதுவான வேகத்தில் வளர்ந்தன. ஆனால் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் விலையை உயர்த்தின.

Listen to the latest songs, only on JioSaavn.com