நிஃப்டி 11,300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 224.26 புள்ளிகள் சரிந்து 37,564.87 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 62.15 புள்ளிகள் சரிந்து 11,297.30 புள்ளிகளில் உள்ளது

நிஃப்டி 11,300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

வங்கி மற்றும் எனர்ஜி, பார்மாசூட்டிகல்ஸ் பங்குகள் சந்தையில் சரிவை எதிர்கொண்டன.

இந்தியப் பங்குச் சந்தை இன்று சரிவை சந்தித்தன. நிஃப்டி 11,300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. ஆசிய பங்கின் பலவீனமான வர்த்தகம் இந்திய பங்குச் சந்தையையும் வெகுவாக பாதித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 224.26 புள்ளிகள் சரிந்து 37,564.87 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 62.15 புள்ளிகள் சரிந்து 11,297.30 புள்ளிகளில் உள்ளது. வங்கி மற்றும் எனர்ஜி, பார்மாசூட்டிகல்ஸ் பங்குகள் சந்தையில் சரிவை எதிர்கொண்டன. ஊடகம் மற்றும் மெட்டல் பங்குகள் சந்தை முன்னேற்றத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளன.

1. காலை 9:34 மணியளவில் சென்செக்ஸ் 157.06 புள்ளிகள் சரிந்து 37,632.07 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 44.35 புள்ளிகள் சரிந்து 11, 315.10 புள்ளிகளில் இருந்தது. 

2. பாரத் பெட் ரோலியம், அதானி பார்ட்ஸ்,ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், யூபிஎல், கிராஸிம் மற்றும் யெஸ் பேங்க் ஆகியவற்றின் வர்த்தம் 1.34 சதவீதம் முதல் 1.76 வரை குறைந்தது. 

3. ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவை சென்செக்ஸில் அதிக நஷ்டத்தை எதிர்கொண்ட நிறுவனங்களாகும். 

4. ஆயில் & கேஸ் பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன். நிஃப்டியில் எனர்ஜி பங்குகள் 1.92 சதவீதம் சரிந்தது.

5. அமெரிக்க -சீனா வர்த்தகத்தில் உள்ள பதட்ட நிலை ஆசிய பங்குச் சந்தையில் சரிவை ஏற்படுத்தியது. 

6. ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள்0.3 சதவீதம் சரிவை எதிர்கொண்டன. ஜப்பானின் நிக்கேய் 0.9 சதவீதம் குறைந்தது. கொரியாவின் கோஸ்பி 0.8 சதவீதம் சரிந்தது. ஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை 0.3 சதவீதம் குறைந்தது.

(With inputs from Reuters)

More News