சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை சென்செக்ஸில் சரிவை சந்தித்தன. 

சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

இந்தியப் பங்குச் சந்தை இன்று பலவீனமாக தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்  245.25 புள்ளிகள் சரிந்து 38,031.38 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 68.75 புள்ளிகள் சரிந்து 11,429. 15 புள்ளிகளில் உள்ளது. ஊடகம், எஃப்எம் சிஜி மற்றும் பார்மா பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. 

காலை 9:22 மணியளவில் சென்செக்ச் 205.44 புள்ளிகள் சரிந்து 38,071.19 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 54.85 புள்ளிகள் சரிந்து 11,443.05 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டியில் வேதாந்தா, ஜீ எண்டர்டெயின்மெண்ட், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும்ம் ஹிண்டல்கோ  ஆகியவற்றின் வர்த்தகம் 1.20 சதவீதம் முதல் 2.06 சதவீதம் வரை குறைந்தது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை சென்செக்ஸில் சரிவை சந்தித்தன. 

ஆசிய சந்தைகளும் சரிவை எதிர்கொண்டன. வால் ஸ்ட்ரீட்டில் ஒரே இரவில் சரிவை கண்டது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக உடன்பாட்டில் ஏற்படும் பின்னடைவு வளர்ச்சியை பாதிக்கும் அச்சத்தால் சரிவு ஏற்பட்டது. 

ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகளின் எம் எஸ்சிஐ பரந்த குறியீட்டெண் 0.75 சதவீதம் சரிந்தது. 

(With inputs from Reuters)

More News