Profit

சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

நிதியியல் மற்றும் எனர்ஜி பங்குகள் பலவீனமடைந்துள்ளன. பங்குச் சந்தை நிபுணர்கள் ஆர்பிஐ யின் முக்கிய வட்டி விகிதம் குறித்த கொள்கை முடிவுகளை எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

நிதியியல் மற்றும் எனர்ஜி பங்குகள் பலவீனமடைந்துள்ளன


இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுக்கான குறிப்புகளுடன் தொடஙகியது. மும்பை பங்குச் சந்தை 106.08 புள்ளிகள் சரிந்து 39,977.46 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 44.25 புள்ளிகள் சரிந்து 11,977.40 புள்ளிகளில் உள்ளது.

நிதியியல் மற்றும் எனர்ஜி பங்குகள் பலவீனமடைந்துள்ளன. பங்குச் சந்தை நிபுணர்கள் ஆர்பிஐ யின் முக்கிய வட்டி விகிதம் குறித்த கொள்கை முடிவுகளை எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.

காலை 9.33 மணியளவில் சென்செக்ஸ் 85.31 புள்ளிகள் சரிந்து இருந்தது. நிஃப்டி 37.75 புள்ளிகள் சரிந்து இருந்தது. 

நிஃப்டியில் கெயில், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், எஸ்பிஐ, மற்றும் இண்டஸ் இண்ட் பேங்க், ஆகியவை தடுமாற்றத்துடன் இருந்து வருகிறது. இவற்றின் வர்த்தகம் 2.05 சதவீதம் முதல் 8.75 சதவீதம் வரை சரிந்துள்ளது. 

சென்செக்ஸில் எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி ஆகியவை நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன.

ஆர்பி ஐயின் கொள்கை முடிவுகள் காலை 11:45 மணியளவில் வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது. ஜப்பானின் நிக்கேய் 0.1 சதவீதம் சரிந்துள்ளது. 

நேற்று ரம்ஜான் காரணமாக இந்திய பங்குச் சந்தை மூடப்பட்டது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top