Profit

சரிவை எதிர்கொண்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் ஆதாயத்தை அடைந்தாலும் ஐடி பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டன

 Share
EMAIL
PRINT
COMMENTS
சரிவை எதிர்கொண்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

நிஃப்டி 45.65 புள்ளிகள் சரிந்து 12,042.90 புள்ளிகளில் உள்ளது.


இந்தியப் பங்குச் சந்தை இன்று சரிவுக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை 137.62 புள்ளிகள் சரிந்து 40,130.00 புள்ளிகளில் உள்ளது, தேசியபங்குச் சந்தை நிஃப்டி 45.65 புள்ளிகள் சரிந்து 12,042.90 புள்ளிகளில் உள்ளது. பங்குச் சந்தை ஆதாயத்திற்கும் நஷ்டத்திற்கும் ஊடாடியது. மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் ஆதாயத்தை அடைந்தாலும் ஐடி பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டன. மத்திய வங்கி கொள்கை முடிவுகள் விரைவில் வரவிருக்கிறது.

காலை 9:54 மணியளவில் சென்செக்ஸ் 45.54 புள்ளிகள் சரிந்து 40,222.08 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தைநிஃப்டி 24.20 புள்ளிகள் சரிந்து 12,064.35 புள்ளிகளில் உள்ளது.

நிஃப்டியில் ஜீ எண்டர்டெயின்மெண்ட், ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ஸ், அதானி பார்ட்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகியவற்றின் வர்த்தகம் 1.50 சதவீதம் முதல் 2.45 சதவீதம் வரைக் குறைந்தது. 

மற்றொருபுறம் யெஸ் பேங்க்,எண்டிபிசி, எல்&டி, ஈகர் மோட்டர்ஸ் மற்றும் பவர்க்ரிட் ஆகியவை நிஃப்டியில் ஆதாயத்தை அடைந்துள்ளன. 1.04 முதல் 2.07 சதவீதம் வரை நிஃப்டியில் உயர்ந்துள்ளன.
நிஃப்டி ஐடி பங்குகள் 1.23 சதவீதம் சரிவை எதிர்கொண்டன.

ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவை எதிர்கொண்டன. MSCI ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் சந்தை 0.3 சதவீதம் குறைந்து பின் வீழ்ச்சி 0.18 சதவீதத்தை எட்டியது. ஜப்பானின் நிக்கேய் 0.42 சதவீதம் குறைந்தது.
 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top