This Article is From Jun 27, 2019

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது நிஃப்டி 11,886 புள்ளிகளை தொட்டது

வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் ஏற்றத்தைக் கண்டுள்ளன. பார்மாஷூட்டிகல் பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன.

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது நிஃப்டி 11,886 புள்ளிகளை தொட்டது

ஐசிஐசிஐ வங்கி, லார்சன் & டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி ஆகியவை சென்செக்ஸில் முன்னேற்றத்தை சேர்த்துள்ளன.

இந்திய பங்குச் சந்தை இன்று முன்னேற்றத்துக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 125.5 புள்ளிகள் அதிகரித்து 39,717.58 புள்ளிகளில் உள்ளது. தேசி பங்குச் சந்தை நிஃப்டி 39.2 புள்ளிகள் அதிகரித்து 11,886.75 புள்ளிகளில் உள்ளது. வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் ஏற்றத்தைக் கண்டுள்ளன. பார்மாஷூட்டிகல் பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன.

தெரிந்து கொள்ளவேண்டிய 10 தகவல்கள்

  1. காலை 9:40 மணியளவில் சென்செக்ஸ் 75.43 புள்ளிகள் அதிகரித்து 39,667.51 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 25.30 புள்ளிகள் அதிகரித்து11,872.85 புள்ளிகளில் இருந்தது. 

  2. நிஃப்டியில் பார்தி இன்ஃப்ராடெல், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், பாரத் பெட்ரோலியம், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவற்றின் வர்த்தகம் 1.00 சதவீதம் முதல் 1.70 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. 

  3. ஐசிஐசிஐ வங்கி, லார்சன் & டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி ஆகியவை சென்செக்ஸில் முன்னேற்றத்தை சேர்த்துள்ளன.

  4.  மும்பை பங்குச் சந்தையில் 950 நிறுவன பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ளன. 375 பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன. தேசிய பங்குச் சந்தையில் 1069 நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. 492 நிறுவனங்கள் சரிவை எதிர்கொண்டன. 

  5. அமெரிக்க அதிபர் ட் ரம்ப் அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

  6. ஜூன் 1முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 28 பொருட்கள் மீது இந்தியா வரியினை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  7. பிரதமர் மோடி ஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றடைந்துள்ளார். உலகின் முக்கிய தலைவர்களுடன் சந்திப்பும் நிகழவுள்ளது.

  8. ஆசிய பங்குச் சந்தைகளில் இலகுவான நிலை இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. அமெரிக்க சீனாவில் வர்த்தகப்போரும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. 

  9. ஆசிய பசிபிக் பங்குச் சந்தை ஜப்பானுக்கு வெளியே 0.6 சதவீதம் உயர்ந்துள்ளது. சீனாவின் புளூ சிப் 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. தென் கொரியாவின் கோஸ்பி 0.6 சதவீதம் மற்றும் ஹாங்காங் மற்றும் ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

  10. சென்செக்ஸ்  மற்றும் நிஃப்டி 0.40 சதவீதம் அதிகரித்துள்ளது.