This Article is From Jun 24, 2019

சென்செக்ஸ்100 புள்ளிகள் உயர்ந்தன

ஹெச்டிஎஃப்சி பேங்க், லார்சன் & டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் இருந்தன

சென்செக்ஸ்100 புள்ளிகள் உயர்ந்தன

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 29.9 புள்ளிகள் உயர்ந்து 11,754.00 புள்ளிகளில் உள்ளது. 

இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 105.53 புள்ளிகள் உயர்ந்து 39,300.02, புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 29.9 புள்ளிகள் உயர்ந்து 11,754.00 புள்ளிகளில் உள்ளது. 

காலை 9:29 மணியளவில் சென்செக்ஸ் 76.11 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. நிஃப்டி 13.15 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. 

நிஃப்டியில் ஹிண்டல்கோ, இண்டஸிண்ட்  பேங்க், பார்தி ஏர்டெல் மற்றும் லார்சன்& டூப்ரோ ஆகியவற்றின் வர்த்தகம் 1.08 சதவீதம் முதல் 1.80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி பேங்க், லார்சன் & டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் இருந்தன. 

ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்கு சந்தைகள் 0.16 சதவீதம் உயர்ந்தன. ஜப்பானின் நிக்கேய் 0.26 சதவீதம் உயர்ந்தன.