சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

நிஃப்டியில் பாரத் பெட் ரோலியம்,ஓஎன்ஜிசி, ஹெச்சிஎல் டெக், பார்தி இன்ஃப்ராடெல், இன்ஃபோசிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 0.97 சதவீத்ம் முதல் 1.88 சதவீதம் வரை உயர்ந்தது.

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சென்செக்ஸில் முன்னிலையில் உள்ளன.

இந்திய பங்குச் சந்தை முன்னேற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 190.42 புள்ளிகள் அதிகரித்து 39,160.22 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 44.8 புள்ளிகள் அதிகரித்து 11,753.90 புள்ளிகளில் உள்ளது. வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் நஷ்டத்திற்கும் ஆதாயத்திற்கும் இடையே ஊடாடியது. 

காலை 9:50 மணியளவில் சென்செக்ஸ் 66.38 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 8.30 புள்ளிகள் அதிகரித்து 11,717.40 புள்ளிகளில் இருந்தது. 

நிஃப்டியில் பாரத் பெட் ரோலியம்,ஓஎன்ஜிசி, ஹெச்சிஎல் டெக், பார்தி இன்ஃப்ராடெல், இன்ஃபோசிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 0.97 சதவீத்ம் முதல் 1.88 சதவீதம் வரை உயர்ந்தது. 

நிஃப்டியில் 694 நிறுவனங்கள் முன்னிலையிலும் 863 நிறுவனப் பங்குகள் சரிந்தும் உள்ளன. சென்செக்ஸில் 693 நிறுவனப் பங்குகள் உயர்ந்தும் 779 நிறுவனப் பங்குகள் சரிந்தும் உள்ளன. 

ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சென்செக்ஸில் முன்னிலையில் உள்ளன. 

மற்றொரு புறம் நிஃப்டியில் யெஸ் பேங்க், டெக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் பேங்க், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னாஸ் மற்றும் ஜெ எஸ் டபுள்யூ ஸ்டீல் ஆகியவை நஷ்டத்தை எதிர்கொண்டன.1.84 சதவீதம் முதல் 3.12 சதவீதம் வரை சரிவை எதிர்கொண்டன.

(With inputs from Reuters)

More News