This Article is From Jun 21, 2019

சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்தன : நஷ்டத்தில் ஆட்டோ, பார்மா பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி மற்றும் மாருதி சுசுகி இந்தியா ஆகியவை சென்செக்ஸில் சரிவை சந்தித்தன.

சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்தன : நஷ்டத்தில் ஆட்டோ, பார்மா பங்குகள்

ஆட்டோ மொபைல் மற்றும் பார்மா பங்குகள் சந்தையின் நஷ்டத்திற்கு காரணமாகின

  1. நிஃப்டியில் 31 நிறுவனங்கள் எதிர்மறையான சூழலில் உள்ளன. யெஸ் பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், மாருதி சுசுகி இந்தியா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜீ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் வர்த்தகம 1.79 சதவீதம் முதல் 3.10 சதவீதம் வரை குறைந்துள்ளது. 
  2. ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி மற்றும் மாருதி சுசுகி இந்தியா ஆகியவை சென்செக்ஸில் சரிவை சந்தித்தன.
  3.   நிஃப்டியில் ஆட்டோமொபைல் துறையின் பங்குகள் நாளில் 1.39 சதவீதமாக சரிந்தன. 
  4. மும்பை பங்குச் சந்தையில் 791 பங்குகளில் 690 பங்குகள் குறைவான வர்த்தகத்தை எதிர்கொண்டன. நிஃப்டியில் 745  நிறுவன பங்குகள் சரிந்தன. 
  5. பொருளாதார மந்தநிலை, கடன் நெருக்கடி மற்றும் பெருநிறுவன நிர்வாக முன்னணியில் உள்ள பிரச்சினைகள் சந்தைகளை பாதிக்கின்றன என்று ஐடிபிஐ மூலதன ஆராய்ச்சித் தலைவர் ஏ.கே.பிராபகர் தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நிஃப்டி 12,200- 12,500 புள்ளி வரை நிஃபியில் சாத்தியம் என்றும் கூறினார். 
  6. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வியாழக்கிழமை 1.25 சதவீதமும் 1.20 சதவீதமும் உயர்ந்தன. 
  7. ஜப்பானுக்கு வெளியே MSCI -யின் ஆசிய பசிபிக் பங்குகளின் பரந்த குறியீடு 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது.