சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரித்தது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், இன்ஃபோசிஸ் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சென்செக்ஸில் முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரித்தது

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 27.55 புள்ளிகள் அதிகரித்து 11,184.55 புள்ளிகளில் உள்ளது

இந்திய பங்குச் சந்தை நேர்மறையான குறிப்புகளுடன் தொடங்கியது.  அமெரிக்க சீனாவுடனான வர்த்தகப் போர் தளர்ந்ததால் ஆசிய பங்குச் சந்தையின் நஷ்டம் குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 89.89 புள்ளிகள் அதிகரித்தது 37,204.77 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 27.55 புள்ளிகள் அதிகரித்து 11,184.55 புள்ளிகளில் உள்ளது. ஐடி, எனர்ஜி, மீடியா பங்குகள் சந்தையை நஷ்டத்திலிருந்து மீட்டன. பார்மா பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டுள்ளது.

காலை 9:38 மணியளவில் சென்செக்ஸ் 77.74 புள்ளிகள் அதிகரித்து 37,192.62 புள்ளிகளிலிருந்தது. நிஃப்டியில் டாடா மோட்டார்ஸ், பார்தி இன்ஃப்ராடெல், ஜூ எண்டர்டெயின்மெண்ட்எண்டர்டெயின்மெண்ட், பவர்  க்ரிட், பஜாஜ் ஃபைன்னாஸ் மற்றும் விப்ரோ ஆகியவற்றின் வர்த்தகம் 1.33 சதவீதம் மற்றும் 2.66 சதவீதம் வரை உயர்ந்தது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், இன்ஃபோசிஸ் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சென்செக்ஸில் முன்னேற்றத்தை எட்டியுள்ளது. 

ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் 0.2 சதவீதம் குறைந்தது. ஜப்பானின் நிக்கேய் 0.6 சதவீதம் குறைந்தது. தென் கொரியா பங்குகள் 0.6 சதவீதம் சரிந்தது. சீனாவின் புளூ சிப்ஸ் பங்குச் சந்தை 0.2 சதவீதம் சரிந்தது. 

More News