Profit

சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்தன; நிஃப்டி 11,250 புள்ளிகளை கடந்தது

ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஐடிசி சென்செக்ஸில் முன்னணியில் உள்ளன. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்தன; நிஃப்டி 11,250 புள்ளிகளை கடந்தது

இந்தியப் பங்குச் சந்தை முன்னேற்றத்துக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. அமெரிக்க சீனா வர்த்தக போர் சற்று தளர்ந்ததையொட்டி ஆசிய பங்குச் சந்தை முன்னேறியுள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 220.52 புள்ளிகள் அதிகரித்து37,539.05 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 52.25 புள்ளிகள் அதிகரித்து 11,274.30 புள்ளிகளில் உள்ளது. நிதியியல் மற்றும் எனர்ஜி பங்குகள் முன்னேறியுள்ளன. பார்மா மற்றும் மெட்டல் பங்குகள் பலவீனமடைந்தன.

காலை 9:19 மணியளவில் சென்செக்ஸ் 104.09 புள்ளிகள் அதிகரித்து 37,422.62 புள்ளிகளில் இருந்தன. நிஃப்டி 34.65 புள்ளிகள் அதிகரித்து 11,256.70 புள்ளிகளில் இருந்தன.

இந்தியா புல்ஸ் ஃபைன்னான்ஸ் , பவர்க்ரிட், மற்றும் கெயில் ஆகியவற்றின் வர்த்தகம் 0.93 சதவீதம் மற்றும் 1.65 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஐடிசி சென்செக்ஸில் முன்னணியில் உள்ளன. 

ஆசிய பங்குச் சந்தைகள் மூணரை மாத இழப்பிலிருந்து சற்று மீண்டு வந்துள்ளது. அமெரிக்க - சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் குறித்த கவலை சற்று தளர்ந்ததே இதற்கு காரணம். 

MSCI ஆசிய பசிபிக் பங்குகள் 0.5 சதவீதம் அதிகரித்தது. ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 0.6 சதவீதம் முன்னேறியது. தென் கொரியாவின் கொஸ்பி 0.7 சதவீதம் அதிகரித்தது. ஜப்பானின் நிக்கேய் 0.1 சதவீதம் சரிந்தது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top