சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது : தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

எனர்ஜி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கிப் பங்குகள் உறுதியாக இருந்தன. ஐடி மற்றும் ஆட்டோ பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டன.

சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது : தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் சரிவை எதிர்கொண்டன.

இந்தியப் பங்குச் சந்தை சரிவுக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. பங்குச் சந்தை தொடங்கிய சில நிமிடங்கள் ஆதாயத்திற்கும் நஷ்டத்திற்கும் இடையே ஊடாடியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்  148.14 புள்ளிகள் அதிகரித்து 36,998.44 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 11,109.20 க்கும் 11,157.95க்கும் இடையே ஊடாடி வருகிறது. எனர்ஜி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கிப் பங்குகள் உறுதியாக இருந்தன. ஐடி மற்றும் ஆட்டோ பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டன.

1.  காலை 9:46 மணியளவில்  21.20 புள்ளிகள்  குறைந்து 37,069.62 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 15.05 புள்ளிகள் குறைந்து 11,133.15 புள்ளிகளில் உள்ளது.

2. நிஃப்டியில் 29 நிறுவனப்பங்குகள் எதிர்மறையாக உள்ளன. நிஃப்டியில் டெக் மஹேந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.சி.எல் டெக் மற்றும் ஏசியன் பெயிண்ஸ், ஆகியவற்றின் வர்த்தகம் 1.07 முதல் 1.63 சதவீதம் வரை சரிந்தன.

3. ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் இன்ஃபோசிஸ்  ஆகியவை சென்செக்ஸின் எடையை அதிகரித்தன்.

4. ஒட்டுமொத்த சந்தையின் வீழ்ச்சியால் 480 பங்குகள் வர்த்தகம் உயர்ந்தும் 927 நிறுவனங்களின் வர்த்தகம் குறைந்தும் காணப்படுகிறது. தேசிய பங்குச் சந்தையில்  493 பங்குகள் வர்த்தகத்தின் முன்னிலையிலும் 1,078 நிறுவனப் பங்குகள் குறைந்தும் காணப்படுகிறது.

5. நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 2.92 சதவீதமாக இருந்தது. முந்தைய மாதத்தில் இது 2.86 சதவீதமாக இருந்தது.

6. இன்றைய நாளோடு தொடர்ந்து 10 நாளாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்து வருகிறது.

7. மற்ற ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஆசிய -பசிபிக் பங்குகள் 1.9 சதவீதமாக சரிந்தன. 

More News