சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

டார்சன் அண்ட் டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோடாக் மஹிந்திரா வங்கி ஆகியவை சென்செக்ஸ் அதிக சரிவை எதிர்கொண்டன. 

சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

நிஃப்டி 48.2 புள்ளிகள் சரிந்து 11,230.70 புள்ளிகளாக குறைந்தது.

இந்தியப் பங்குச் சந்தை திங்கள்கிழமை இன்று பலவீனமாகத் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 143.99 புள்ளிகள் சரிந்து 37,319.00 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 48.2 புள்ளிகள் சரிந்து 11,230.70 புள்ளிகளாக குறைந்தது. சென்செக்ஸ் தொடங்கும் போதே 28.31 புள்ளிகள் உயர்ந்தும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 20.2 புள்ளிகள் சரிந்து தொடங்கியது. 

காலை 9:45 மணியளவில் சென்செக்ஸ் 58.74 புள்ளிகள் குறைந்து 37,404.25 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டி 37.20 புள்ளிகள் சரிந்து 37.20 புள்ளிகளாக குறைந்து 11,241.70 ஆக இருந்தது. 

நிஃப்டியில் 32 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகத்தை செய்தன. ஈகர் மோட்டார்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், லார்சன் & டர்போ, ஜீ எண்டர்டெயின்மெண்ட், டாக்டர் ரெட்டி'ஸ் லேபரெட்டரி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் 1.64 சதவீதம் மற்றூம் 4.18 சதவீதம் சரிவைச் சந்தித்தன.

டார்சன் அண்ட் டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோடாக் மஹிந்திரா வங்கி ஆகியவை சென்செக்ஸ் அதிக சரிவை எதிர்கொண்டன. 

மற்ற ஆசிய சந்தைகளில் இருக்கும் சரிவு அமெரிக்க சீனா தங்களது வர்த்தகப்போர் உடன் பாட்டை எட்டுமா என்ற நிச்சயமற்ற தன்மையை இழந்து விட்டது. ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் 0.4%  வீழ்ச்சியடைந்தது. ஜப்பானின் நிக்கேய் 1.0 சதவீதம் குறைந்தது. 

ஹாங்காங்கின் நிதிச் சந்தைகள் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டது.  

(With inputs from Reuters)

More News