Profit

ஆசிய பங்குச் சந்தை சரிவின் எதிரொலி : சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

ஹெசிடிஎஃப்சி பேங்க், ஐடிசி மற்றும் லார்சன் &டூப்ரோ ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் இருந்தாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் எண்டிபிசி ஆகியவை சரிவை சந்தித்தன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆசிய பங்குச் சந்தை சரிவின் எதிரொலி : சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

இன்ஃபோசிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் பேங்க் காலாண்டு கால வருவாயை இன்று பிற்பகலில் தெரிவிக்கும்.


இந்திய பங்குச் சந்தை உயர்வதற்கான குறிப்புகளுடன் தொடங்கி சட்டென சரிவை நோக்கி வீழ்ந்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 179.79 புள்ளிகள் சரிந்து 38,941.10 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 49.4 புள்ளிகள் சரிந்து 11,608.90 க்கும் 11,559.50 புள்ளிக்கும் இடையே ஊடாடிக் கொண்டிருக்கிறது. வங்கி மற்றும் எனர்ஜி ஆகியவை பலவீனமாக உள்ளன. பார்மா மற்றும் எனர்ஜி பங்குகள் முன்னனியில் உள்ளன. 

காலை 9:50 மணியளவில் சென்செக்ஸ் 24.04 புள்ளிகள் சரிந்து 38,799.07 ஆக இருந்தது. நிஃப்டி 14.55 புள்ளிகள் சரிந்து 11,568.35 புள்ளிகளில் உள்ளது.

நிஃப்டியில் விப்ரோ, பார்தி ஏர்டெல், ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல், டாக்டர் ரெட்டி மற்றும் இந்தியன் ஆயில் ஆகியவற்றின் வர்த்தகம் 0.98 சதவீதம் மற்றும் 2.52 சதவீதம் வரை குறைந்துள்ளது.

மற்றொரு புறம் யூபிஎல், சன் பார்மா, எண்டிபிசி, அல்டரா டெக் சிமிண்ட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 0.91 சதவீதம் முதல் 1.94 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 

ஹெசிடிஎஃப்சி பேங்க், ஐடிசி மற்றும் லார்சன் &டூப்ரோ ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் இருந்தாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் எண்டிபிசி ஆகியவை சரிவை சந்தித்தன.

தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் பேங்க் காலாண்டு கால வருவாயை இன்று பிற்பகலில் தெரிவிக்கும். 

மாலை 5.30 மணிக்கு நுகர்வோ பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி பற்றிய தரவுகளை அரசாங்கம் வெளியிடவுள்ளது. அமெரிக்க விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்குவதில் குறித்த வாக்குறுதிகளுக்கு சீனா மறுப்பு தெரிவித்த நிலையில் வர்த்தகப் போரின் சூடு அதிகரித்துள்ளது.

ஜப்பானுக்கு வெளியே ஆசிய பங்குச் சந்தை எம்.எஸ்.சி.ஐயின் பரந்த குறியீட்டு எண் 0.05 சதவீதம் சரிந்தது . ஆஸ்திரேலிய பங்குகள் 0.16 சதவீதம் சரிந்தது. ஜப்பானின் நிக்கேய் 0.11 சதவீதமும் குறைந்துள்ளது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top