சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது; வங்கி பங்குகள் உயர்ந்துள்ளன

ஜீ எண்டர்டெயின்மெண்ட், யெஸ் பேங்க், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ் மற்றும் ஐசிஐசிஐ பேங்க், ஆகியவற்றின் வர்த்தகம் 1.07 சதவீதம்முதல் 2.50 சதவீதம் அதிகரித்தது

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது; வங்கி பங்குகள் உயர்ந்துள்ளன

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவை சென்செக்ஸின் முன்னேற்றத்திற்கு மிகவும் பங்களித்தன.

இந்தியப் பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கிய்து. ஆசியாவில் இருமடங்காக உயர்ந்துள்ளன. அமெரிக்கவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக் உடன் படிக்கை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்தன. 

 மும்பை பங்குச் சந்தை  150.96 புள்ளிகள் அதிகரித்து 37,709.87 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 40.75 புள்ளிகள் அதிகரித்து 11,342.55 புள்ளிகள் உயர்ந்தது. வங்கி பங்குகள் சந்தையை ஆதாரித்தன. 

காலை 9:36 மணிக்கு சென்செக்ஸ் 98.88 புள்ளிகள் உயர்ந்து 37,657.79 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 27.10 புள்ளிகள் அதிகரித்து 11,328.90 புள்ளிகளிலிருந்தது. 

 ஜீ எண்டர்டெயின்மெண்ட், யெஸ் பேங்க்,  இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ் மற்றும் ஐசிஐசிஐ பேங்க், ஆகியவற்றின் வர்த்தகம் 1.07 சதவீதம்முதல் 2.50 சதவீதம் அதிகரித்தது.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவை சென்செக்ஸின் முன்னேற்றத்திற்கு மிகவும் பங்களித்தன. எஸ்பிஐயின் பங்குகள் 1.12 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 

ஜப்பானின் நிக்கேய் 0.4 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட் ரம்ப் வியாழக்கிழமை சீன ஜனாதிபதியிடம் இருந்து “அழகான கடிதம்” வந்துள்ளதாக அறிவித்தார். வாஷிங்டன் சீன பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் மதிப்பு வரிகளை நிறுத்தி வைத்துள்ளது. ஆசிய பங்குகளின் வர்த்தகத்தில் ஆதரவை இது வழங்கியது. 

(With inputs from Reuters)

More News