Profit

சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன; நிஃப்டி 11,850 புள்ளிகளை கடந்தன

ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை சென்செக்ஸில் முன்னிலையில் உள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன; நிஃப்டி 11,850 புள்ளிகளை கடந்தன

வங்கி, ஆட்டோ மற்றும் மெட்டல் பங்குகளின் ஆதாயம் சந்தை முன்னேற்றத்திற்கு உதவியது.

இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 237.05 புள்ளிகள் அதிகரித்து 39,631.69 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 66.8 புள்ளிகள் உயர்ந்து 11,855.65 புள்ளிகளில் உள்ளது. வங்கி, ஆட்டோ மற்றும் மெட்டல் பங்குகளின் ஆதாயம் சந்தை முன்னேற்றத்திற்கு உதவியது.
Here are 10 things to know:
  1. காலை 9.25 மணியளவில் 198.88 புள்ளிகள் அதிகரித்து 39,593.52 புள்ளிகளில் இருந்தது. நிப்டி 53.20 புள்ளிகள் அதிகரித்து 11,842.05 புள்ளிகளில் இருந்தது. 
  2. நிஃப்டியில்  எண்டிபிசி, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், டாக்டர் ரெட்டி, டாடா ஸ்டீல், ஜூ எண்டர்டெயின்மெண்ட், ஈகர் மோட்டார்ஸ் மற்றும் இண்டஸிண்ட் பேங்க் ஆகியவற்றின் வர்த்தகம் 1.33 சதவீதம் மற்றும் 1.95 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 
  3. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை சென்செக்ஸில் முன்னிலையில் உள்ளன.
  4. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 825 பங்குகள் முன்னிலையில் உள்ளன, 329 பங்குகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 1,021 பங்குகள் ஆதாயத்தை அடைந்தன. 489 பங்குகள் நஷ்டத்தில் உள்ளன. 
  5. நிஃப்டியில் வங்கி பங்குகள் 0.77 சதவீதம் உயர்ந்துள்ளன. 
  6. ஜெட் எரிபொருளின் விலை 5-6 சதவீதம் குறைந்ததைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து வங்குகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. ஸ்பைஸ்ஜெட் பங்குகள்3.08 சதவீதம் உயர்ந்தன. இண்டிகோ பங்குகள்1.49 சதவீதம் உயர்ந்தது.
  7. அமெரிக்க சீனா வர்த்தக போரின் கவலை சற்றே தளர்ந்துள்ளது.
  8. ஜப்பானுகு வெளியே ஆசிய பசிபிக் பங்குகளின் விலை 0.4 சதவீதம் உயர்ந்தது. ஜப்பானின் நிக்கேய் 1.6 சதவீதம் உயர்ந்துள்ளன. சீனாவின் புளூ சிப் 2.1 சதவீதம் உயர்ந்துள்ளது.




Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top