Profit

ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவிற்கு முன்னால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவை எதிர்கொண்டன

ஜீ எண்டர்டெயின்மெண்ட், யெஸ் வங்கி, விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை -1.40 சதவீதம் முதல் 5.65 சதவீதம் வரை ஆதாயத்தை பெற்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவிற்கு முன்னால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவை எதிர்கொண்டன

ஆர்பிஐயின் கொள்கை மறுஆய்வுக் கூட்டம் காரணமாக பங்குச் சந்தைகள் முன்னெச்சரிக்கைகான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 91.37 புள்ளிகள் சரிந்து 36,885.48 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 34.85 புள்ளிகள் சரிந்து 10,913.40 புள்ளிகளில் உள்ளது. தகவல் தொழில்நுட்ப பங்குகள் மற்றும் பார்மாஷூட்டிகல் பங்குகள் ஆகியவற்றின் ஆதாயங்கள் வங்கி மற்றும் நிதியியல் பங்குகளின் பலவீனங்களை சரிக்கட்டின.

காலை 9:39 மணியளவில் சென்செக்ஸ் 13.62 புள்ளிகள் சரிந்திருந்தன. நிஃப்டி 10.45 புள்ளிகள் சரிந்திருந்தன. 

நிஃப்டியில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைன்னான்ஸ், டைட்டன், டாடா ஸ்டீல், ஜே.எஸ்,டபுள்யூ ஸ்டீல் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவற்றின் வர்த்தகம் 1.54 சதவீதம் முதல்  7.61 சதவீதம் வரை நஷ்டத்தால் போராடி வருகின்றன.

மறுபுறம் ஜீ எண்டர்டெயின்மெண்ட், யெஸ் வங்கி, விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை -1.40 சதவீதம் முதல் 5.65 சதவீதம் வரை ஆதாயத்தை பெற்றன.

இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சென்செக்ஸின் முன்னேற்றத்திற்கு அதிக பங்களிப்பை அளித்தன. ஹெச்டிஎஃப்சி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை நஷ்டத்தை எதிர்கொண்டன.

 சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி செவ்வாயன்று முறையே 0.75 சதவீதம் மற்றும் 0.79 சதவீதம் உயர்ந்தன. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top