Profit

ஆசிய பங்குச் சந்தை சரிவின் எதிரொலி : சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸில் சரிவை எதிர்கொண்டன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆசிய பங்குச் சந்தை சரிவின் எதிரொலி : சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

ஆட்டோ மற்றும் மெட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.


இந்திய பங்குச் சந்தை முன்னெச்சரிக்கைக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. ஆசிய பங்குச் சந்தையின் சரிவின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ச் 123.64 புள்ளிகள் சரிந்து  37,759.15 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 54.6 புள்ளிகள் சரிந்து 11,229.70 புள்ளிகளில் உள்ளது. ஐடி பங்குகள்  சில வங்கிகளின் பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ளன.  ஆட்டோ மற்றும் மெட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன. 

காலை 9:38 மணியளவில் சென்செக்ஸ் 74.27 புள்ளிகள் சரிந்து 37,808.52 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 44.45 புள்ளிகள் சரிந்து 11,239.85 புள்ளிகளில் இருந்தது. 

மும்பை பங்குச் சந்தையில் 634 பங்குகள் முன்னணியில் உள்ளன. 888 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன. தேசிய பங்குச் சந்தை 596 பங்குகள் முன்னணியிலும் 991 பங்குகள் சரிவை எதிர்கொண்டன. 

நிஃப்டியில் இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், ஜெஎஸ்டபுள்யூ ஸ்டீல், வேதாந்தா டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுசுகி இந்தியா ஆகியவற்றின் வர்த்தகம் 2.68 சதவீதம் முதல் 6.69 சதவீதம் வரை குறைந்தன.

ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸில் சரிவை எதிர்கொண்டன.

மற்றொரு புறம், ஐசிஐசிஐ பேங்க்கின் பங்குகள் 4.57 சதவீதம் உயர்ந்தன. 

கடந்த வாரம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1.18 சதவீதம் சரிவை எதிர்கொண்டன. கடந்த வாரம் முழுவதும் நஷ்டத்தை எதிர்கொண்டது. இரண்டு மாதங்களில் நீண்ட கால நஷ்டமாக இது பார்க்கப்படுகிறது. 

ஆசிய-பசிபிக் பங்குகள் ஜப்பானுக்கு வெளியே எம்.எஸ்.சி.ஐ 0.4 சதவீதம் சரிவை எதிர்கொண்டன. ஜப்பானின் நிக்கேய் 0.5 சதவீதம் சரிந்தது. ஷாங்காய் புளூ சிப் 0.2 சதவீதம் சரிந்தது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top