Profit

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியது

நிஃப்டியில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபுள்யூ எல் ஸ்டீல், மாருதி சுசுகி மற்றும் ஹெச்யூஎல் ஆகியவற்றின் வர்த்தகம் 1.61 சதவீதம் முதல் 2.53 சதவீதம் வரை சரிந்தன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியது

சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்யூஎல், கோடாக் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிந்தன


இந்திய பங்குச் சந்தை மந்தமான குறிப்புடன் தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் ஆதாயங்களுக்குப் பிறகு இன்று சரிவை  கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 114.15 புள்ளிகள் சரிந்து 37,527.12 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 27.55 புள்ளிகள் குறைந்து 11,077.80 ஆக உள்ளது.

நிதித்துறை, ஆட்டோமொபைல் மற்றும் மெட்டல் பங்குகளின் பலவீனம் சந்தைகளை சரிவை உண்டாக்கியது. இருப்பினும் தொழில்நுட்பம் மற்றும் ஃபார்மஸி பங்குகளின் உயர்வு பங்குச் சந்தைக்கு ஆதரவளித்தன. 

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்:

காலை 9:41 மணிக்கு சென்செக்ஸ் 43.67 புள்ளிகள் சரிந்து  37,597.60 ஆக குறைந்தது. நிஃப்டி 3.45 புள்ளிகள் குறைந்து 11,108.80 புள்ளிகள் வரை குறைந்தன

நிஃப்டியில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபுள்யூ எல் ஸ்டீல், மாருதி சுசுகி மற்றும் ஹெச்யூஎல் ஆகியவற்றின் வர்த்தகம் 1.61 சதவீதம் முதல் 2.53 சதவீதம் வரை சரிந்தன.

மறுபுறம் டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக், கெயில், சிப்லா மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவற்றின் வர்த்தகம் 1.61 சதவீதம் முதல் 2.53 சதவீதம் வரை அதிக லாபம் ஈட்டின.

மும்பை பங்குச் சந்தையில் 787 பங்குகள் உயர்ந்தும் 656 நிறுவனப் பங்குகள் சரிந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையில்  848 பங்குகள் அதிகரித்தன. 709 பங்குகள் சரிவை எதிர்கொண்டன.

சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்யூஎல், கோடாக் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிந்தன

ஜூன் 30 தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான தரவுகளை வெள்ளிக்கிழமை மாலை அரசாங்கம் வெளியிட உள்ளது. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கருத்துப்படி 5.7சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இது மிகவும் மந்தமான உற்பத்தி நிலையாகும் 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top