Profit

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

ஆட்டோமொபைல், மெட்டல் மற்றும் எனர்ஜி பங்குகள் சந்தையின் சரிவுக்கு காரணமாகின

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், மற்றும் டிசிஎஸ் ஆகியவை கடும் சரிவை எதிர்கொண்டன.

ஆட்டோமொபைல், மெட்டல் மற்றும் எனர்ஜி பங்குகள் சந்தையின்
சரிவுக்கு காரணமாகின
  1. இந்திய பங்குச் சந்தை இன்று கலவையான குறிப்புகளுடன் தொடங்கியது. சர்வதேச நாணய நிதியம் இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்பைக் குறைத்த ஒரு நாளுக்குப்பிறகு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 120.1 புள்ளிகள் அதிகரித்து38,102.84 புள்ளிகளில் அதிகரித்திருந்தது. சட்டென 337.17 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 107.85 புள்ளிகள் அதிகரித்து 11,359.75 புள்ளிகளில் இருந்தது. பிற்பகுதியில் 11,251.90 புள்ளிகளைத் தொட்டது. ஆட்டோமொபைல், மெட்டல் மற்றும் எனர்ஜி பங்குகள் சந்தையின் சரிவுக்கு காரணமாகின
  2. இந்திய பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டில் 7.0 சதவீதமாகவும் அடுத்த ஆண்டு 7.2 சதவீதமாகவும் வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது உள்நாட்டு தேவைக்கு எதிர்பார்த்ததை விட பலவீனமான பார்வையை மேற்கோளிட்டுள்ளது. 
  3. காலை 10:11 மணிக்கு சென்செக்ஸ்  180.39 புள்ளிகள் சரிந்து 37,802இல் இருந்தது. நிஃப்டி 69.10 புள்ளிகள் குறைந்து 11,261.95 புள்ளிகளில் இருந்தன.
  4. மும்பை பங்குச் சந்தையில் 615 பங்குகள் முன்னேற்றத்துடனும் 1,112 நிறுவனப் பங்குகள் சரிவுடன் உள்ளன. தேசிய பங்குச் சந்தையில் 521 பங்குகள் முன்னணியிலும் 1,087 பங்குகள் சரிந்தும் காணப்பட்டன
  5. நிஃப்டியில் ஈகர் மோட்டார்ஸ், ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல், பிபிசிஎல், பஜாஜ் ஃபைன்னான்ஸ், வேதாந்தா, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன. இதன் வர்த்தகம் 1.79 முதல் 3.69 வரை சரிந்தன.
  6. சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், மற்றும் டிசிஎஸ் ஆகியவை கடும் சரிவை எதிர்கொண்டன.
  7. லார்சன் & டூப்ரோவின் பங்குகள் வர்த்தகத்தில் 1.31 சதவீதம் சரிந்தன. ஜூன் 30 தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் தொடர்ச்சியான செயல்பாடுகளில் இருந்து நிகர லாபத்தில் 20.46 சதவீதம் உயர்ந்துள்ளது. 
  8. மறுபுறம் இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 1.11சதவீதம் அதிகரித்து உள்ளது. 
  9. ஜப்பானுக்கு  வெளியே ஆசிய-பசிபிக் பங்குச் சந்தையில் 0.4 சதவீதம் உயர்ந்தன. சீனாவில் புளூ சிப் 1.2 சதவீதம் உயர்ந்தது
  10. ஜப்பானின் நிக்கேய் 0.5 சதவீதத்தையும் ஆஸ்திரேலிய பங்குகள் 0.8 சதவீதமும் உயர்ந்தன.




Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top