Profit

நிஃப்டி 10,900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது: நிதியியல், மெட்டல் பங்குகள் பலவீனமடைந்தன

ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜான் பைன்னான்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவை சென்செக்ஸில் சரிவை எதிர்கொண்டன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நிஃப்டி 10,900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது: நிதியியல், மெட்டல் பங்குகள் பலவீனமடைந்தன

தேசிய பங்குச் சந்தையில் 453 நிறுவவனப் பங்குகள் முன்னணியிலும் 1,095 பங்குகள் சரிவிலும் உள்ளன.


இந்திய பங்குச் சந்தை சரிவுக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 176.54 புள்ளிகள் சரிந்து 36,883.83 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை 62.50 புள்ளிகள் சரிந்து 10,856.20 புள்ளிகளில் உள்ளது. நிதியியல், மெட்டல் மற்றும் எனர்ஜி பங்குகள் பலவீனமடைந்துள்ளன. நுகர்வோர் பொருட்களுகான பங்குகள் சந்தையை ஆதரித்தன. காலை 9:36 மணியளவில் சென்செக்ஸ் 108.92 புள்ளிகள் சரிந்திருந்தன. நிஃப்டி 39.25 புள்ளிகள் சரிந்திருந்தன. 

நிஃப்டியில் இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், அதானி பார்ட்ஸ், வேதாந்தா, பஜாஜ் பைன்னான்ஸ் மற்றும் ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் ஆகியவற்றின் வர்த்தகம் 1.92 சதவீதம் முதல் 6.19 சதவீதம் வரை சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 411 பங்குகள் உயர்ந்தும் 878 பங்குகள் சரிவிலும் உள்ளன. தேசிய பங்குச் சந்தையில்  453 நிறுவவனப் பங்குகள் முன்னணியிலும் 1,095 பங்குகள் சரிவிலும் உள்ளன. 

ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜான் பைன்னான்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவை சென்செக்ஸில் சரிவை எதிர்கொண்டன.

நிஃப்டியில் நுகர்வோர் பொருட்களுக்கான பங்கு 0.91 சதவீதம் உயர்ந்தது. பிரிட்டானிய பங்குகள் 3.88 சதவீதம் உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக உள்ளன. எம்.எஸ்.சி.ஐயின் ஆசிய பசிபிக் பங்குகள் 0.2 சதவீதம் சரிந்தன. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top