Profit

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன; நிஃப்டி 11,600 புள்ளிகளை தாண்டியது

Sensex today, stock market updates: நிதியியல், ஐடி, மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் சந்தையில் முன்னணியில் உள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன; நிஃப்டி 11,600 புள்ளிகளை தாண்டியது

இந்திய பங்குச் சந்தை இன்று முன்னேற்றத்திற்கான  குறிப்புகளுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 161.27 புள்ளிகள் அதிகரித்து 39,058.73 புள்ளியாக உயர்ந்துள்ளன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 43.45 புள்ளிகள் அதிகரித்து 11,640.35புள்ளிகளில் உள்ளது. நிதியியல், ஐடி, மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் சந்தையில் முன்னணியில் உள்ளன. 

காலை 9:18 மணியளவில் சென்செக்ஸ் 113.89 புள்ளிகள் அதிகரித்து 39,011.35 புள்ளியாக இருந்தன. நிஃப்டி 31.50 புள்ளிகள் அதிகரித்து 11,628.40  புள்ளியாக இருந்தன. 

நிஃப்டியில் டைட்டன், ஹிண்டல்கோ, அல்ட்ராடெக் சிமிண்ட், எண்டிபிசி, யூபிஎல், கோல் இந்தியா மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், ஆகியவற்றின் வர்த்தகம் 1.16 சதவீதம் முதல் 1.39 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா கன்சல்டென்சி சர்வீஸஸ் மற்றும் ரிலையன்ச் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் உள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹிண்டல்கோ ஆகிய நிறுவனங்கள் ஜூன் மாதத்திற்கான நிதியியல் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடவுள்ளது. ஹெச்டிஎஃப்சி பேங்க் சனிக்கிழமை  வெளியிடவுள்ளது.

ஆசிய சந்தைகளில் ஆதாயம் கிடைத்தன. இந்த மாத இறுதியில் அமெரிக்கா வட்டிவீதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளை உறுதிபடுத்தியது.

ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகளின் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்தது. ஆஸ்திரேலிய பங்குகள் 0.4 சதவீதம் சரிந்தன. தென்கொரியாவில் கோஸ்பி 0.8 சதவீதம் அதிகரித்தன. ஜப்பானின் நிக்கேய் 1 சதவீதம் உயர்ந்தன.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top