Profit

சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது: வங்கி, எனர்ஜி மற்றும் மெட்டல் பங்குகள் உயர்ந்தன

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை சென்செக்ஸில் முன்னிலையில் உள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது: வங்கி, எனர்ஜி மற்றும் மெட்டல் பங்குகள் உயர்ந்தன

பார்மா மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான பங்குகள் பலவீனமடைந்துள்ளன.


இந்திய பங்குச் சந்தை இன்று முன்னேற்றத்திற்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 215.06 புள்ளிகள் அதிகரித்து 37173.22 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 77.9 புள்ளிகள் அதிகரித்து 11,003.75 புள்ளிகளில் உள்ளது. வங்கி, எனர்ஜி மற்றும் மெட்டல் பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ளன. பார்மா மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான பங்குகள் பலவீனமடைந்துள்ளன.

காலை 9:39 மணியளவில் சென்செக்ஸ் 121.43 புள்ளிகள் அதிகரித்து 37,079.59 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 43.65 புள்ளிகள் அதிகரித்து 10,969.50 புள்ளிகளில் உள்ளது. 

நிஃப்டியில் டாடா ஸ்டீல், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், ஜீ எண்டர்டெயிண்மெண்ட், வேதாந்தா, யெஸ் பேங்க் மற்றும் கெயில் ஆகியவற்றின் வர்த்தகம் 2.38 சதவீதம் முதல் 3.53 சதவீதம் வரை உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில்  770 நிறுவனப் பங்குகள் முன்னேற்றத்தையும் 537 நிறுவனப்பங்குகள் நஷ்டத்தையும் எதிர்கொண்டன. தேசிய பங்குச் சந்தையில் 861 பங்குகள் முன்னணியிலும் 656 பங்குகள் சரிவையும் எதிர்கொண்டன. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை சென்செக்ஸில் முன்னிலையில் உள்ளன. 

பொருளாதாரத்தை புதுப்பிக்க தொழிற்துறைக்கு சார்பாக நிதி அமைச்சகம் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலினால் ஆதாயம் ஏற்பட்டுள்ளன.

தொழிற்துறையை புதுப்பிக்கும் பொருட்டு வியாபாரத்தை எளிதாக்கும் நடைமுறைகள் அரசு வகுக்கும் என்று ஐ.ஏ.என்.எஸ் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது. 

செவ்வாயன்று அரசாங்கத்தின் தகவல்கள் நுகர்வோர் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாக் வந்துள்ளது. அக்டோபரில் நடக்கும் அடுத்த இருமாத மதிப்பாய்வில் ரிசர்வ் வங்கி வீதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top