Profit

வங்கி,ஆட்டோ, மெட்டல் பங்குகள் உயர்ந்தன : சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்குமேல் உயர்ந்தன

ஐசிஐசிஐ பேங்க், லார்சன் &டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் உள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வங்கி,ஆட்டோ, மெட்டல் பங்குகள் உயர்ந்தன : சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்குமேல் உயர்ந்தன

ஆட்டோ மொபைல் மற்றும் மெட்டல் பங்குகள் சந்தை ஆதரித்தன.


இந்திய பங்குச் சந்தை இன்று முன்னேற்றத்துக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. பேங்கிக், ஆட்டோ, மற்றும் மெட்டல் பங்குகள் உயர்ந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 233.29 புள்ளிகள் உயர்ந்து 36, 933.13 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 76.05 புள்ளிகள் உயர்ந்து 10,938.65 இல் உள்ளது. வங்கி, நிதியியல் சேவைகள், ஆட்டோ மொபைல் மற்றும் மெட்டல் பங்குகள் சந்தை ஆதரித்தன. சில தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பங்குகள் பலவீனமடைந்தன.

நாளின் தொடக்கத்தில் சில நிமிடங்கள் ஆதாயங்கள் இழந்தன. 

காலை 9:45 மணியளவில் சென்செக்ஸ் 140.65 புள்ளிகள் சரிந்து36,840.49 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டி39.60 புள்ளிகள் உயர்ந்து 10,902.20 புள்ளிகளில் இருந்தது. 

மும்பை பங்குச் சந்தையில் 1,097 பங்குகள் ஆதாயத்தை அடைந்தன 393 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன. தேசிய பங்குச் சந்தையில் 1,164 பங்குகள் முன்னணியில் உள்ளன 414 நிறுவனப் பங்குகள்  சரிவை எதிர்கொண்டன. 

நிஃப்டியில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், கெயில்,இண்டஸ் இண்ட்பேங்க், கிராஸிம், மாருதி சுசுகி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியவற்றின் வர்த்தகம் 1.53 சதவீதம் முதல் 5.47 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஐசிஐசிஐ பேங்க், லார்சன் &டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் உள்ளன. 

ஆசிய- பசிபிக் பங்குச் சந்தை எம்.எஸ்.சி.ஐ 1.5 சதவீதம் சரிந்தன. ஷாங்காய் காம்போசிட் 2 சதவீதம் சரிந்தன. ஜப்பானின் நிக்கேய் 2.1 சதவீதம் உயர்ந்தன. ஆஸ்திரேலியன் பங்குகள் 2.3 சதவீதம் மற்றும் தென் கொரியாவில் கோஸ்பி 1.6 சதவீதம் சரிந்தன



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top