சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

நிஃப்டியில் எண்டிபிசி, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, டாடா கன்சல்டென்ஸி சர்வீஸ், மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 1.00 சதவீதம் முதல் 1.83 சதவீதம் உயர்ந்தது.

சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சென்செக்ஸில் ஆதாயத்தை அடைந்தன.

இந்திய பங்குச் சந்தை இன்று நேர்மறையான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 256.55 புள்ளிகள் உயர்ந்து 39,758.60 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை 67.2 புள்ளிகள் உயர்ந்து 11,928.30 புள்ளிகளில் உள்ளது. ஐடி, எனர்ஜி மற்றும் மாநிலங்கள் நடத்தும் வங்கிகள் சந்தையை ஆதரித்துள்ளன.  ஆட்டோ மொபைல் பங்குகள் ஆதாயத்தை அடைந்தன.

காலை 10:11 மணியளவில் சென்செக்ஸ் 177.12 புள்ளிகள் உயர்ந்து 39,679.17 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 48.85 புள்ளிகள் அதிகரித்து 11,909.95 புள்ளிகளில் உள்ளது. 

நிஃப்டியில் எண்டிபிசி, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, டாடா கன்சல்டென்ஸி சர்வீஸ், மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 1.00 சதவீதம்  முதல் 1.83 சதவீதம் உயர்ந்தது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சென்செக்ஸில் ஆதாயத்தை அடைந்தன.

ஆசிய பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டன. ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள்0.1 சதவீதம் சரிவை எதிர்கொண்டன. ஜப்பானின் நிக்கேய் 0.85 சதவீதம் குறைந்தன. ஆஸ்திரேலிய பங்குகள் 0.7 சதவீதம் சரிந்தனன. சாங்காய் பங்குச் சந்தஹி 0.8 சதவீதம் சரிவை எதிர்கொண்டன. ஹாங்காங் 0.35 சதவீதம் சரிந்தன.