ஆசிய பங்குச் சந்தையின் எதிரொலி: சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

மும்பை பங்குச் சந்தையில் 678 பங்குகள் பெரிய ஏற்ற இறக்கமின்றி உள்ளது 669 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தில் உள்ளன.

ஆசிய பங்குச் சந்தையின் எதிரொலி: சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

ஆசிய பங்குச் சந்தைகளின் உயர்வு இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 165.34 புள்ளிகள் உயர்ந்து 39,010.61 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 45.7 புள்ளிகள் அதிகரித்து 11,619.65 புள்ளிகளில் உள்ளது. 

மெட்டல், வங்கி மற்றும் எனர்ஜி பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ளன. ஆட்டோ மற்றும் ஐடி பங்குகள் பலவீனமடைந்துள்ளன. 

காலை 9:38 மணியளவில் 97.17 புள்ளிகள் அதிகரித்து 38,993.88 புள்ளிகளில் இருந்தன. நிஃப்டி 16.05 புள்ளிகள் உயர்ந்து 11,604.40 புள்ளிகளில் உள்ளது. 

நிஃப்டியில் டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல் மற்றும் சிப்லா ஆகியவை அதிக ஆதாயம் அடைந்துள்ளது. இவற்றின் அதிகாராம் 1.16 சதவீதம் முதல்1.86 சதவீதம் உயர்ந்துள்ளது. மற்றொரு புறம் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், டிசிஎஸ், யூபிஎல், மஹேந்திர & மஹேந்திரா ஆகியவற்றின் வர்த்தகம் 1.07 சதவீதம் முதல்  2.01 சதவீதம் வரை சரிந்தன. 

ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஆகியவை சென்செக்ஸில் முன்னிலையில் உள்ளன. டிசிஎஸ், மஹேந்திர & மஹேந்திரா மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவை சரிவை எதிர்கொண்டன.

மும்பை பங்குச் சந்தையில் 678 பங்குகள் பெரிய ஏற்ற இறக்கமின்றி உள்ளது 669 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தில் உள்ளன. தேசிய பங்குச் சந்தையில் 764 நிறுவனப் பங்குகள் முன்னணியில் உள்ளன. அதே எண்ணிக்கையுள்ள நிறுவனப் பங்குகள் சரிவை எதிர்கொண்டுள்ளன.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.41 சதவீதம் 0.31 சதவீதம் முறையே உயர்ந்துள்ளன.

More News