Profit

சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன: நிதியியல் மெட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன

மும்பை பங்குச் சந்தையில் 623 பங்குகள் ஆதாயத்தை அடைந்தன. 1,041 பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன. தேசிய பங்குச் சந்தையில் 514 பங்குகள் முன்னணியில் உள்ளன. 1,093 பங்குகள் சரிவை எதிர்கொண்டன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன: நிதியியல் மெட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன

நிதியியல், மெட்டல், நுகர்வோர் பொருட்களுக்கான பங்குகள் சரிவை எதிர்கொண்டன.


இந்திய பங்குச் சந்தை இன்று ஆதாயத்துடன் தொடங்கி சிறிது நேரத்தில் சரிவை நோக்கி வீழ்ந்ததது. ஆசிய பங்குச் சந்தையினால் தகவல் தொழில்நுட்ப பங்குகள் ஆதாயத்தை அடைந்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 109.06 புள்ளிகள் அதிகரித்து 37,511.55 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் 201.17 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தை  நிஃப்டி 63புள்ளிகள் சரிந்து 11,07630 புள்ளிகளில் உள்ளது. 

காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 132.81 புள்ளிகள் அதிகரித்து 37,269.68 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 49.35 புள்ளிகள் சரிந்து 11,004.55 புள்ளிகளில் இருந்தது. நிதியியல், மெட்டல், நுகர்வோர் பொருட்களுக்கான பங்குகள் சரிவை எதிர்கொண்டன.

தேசிய பங்குச் சந்தையில் யெஸ் பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், பிரிட்டானியா, பஜாஜ் ஃபைன்னான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக்  சிமிண்ட் மற்றும் ஐடிசி ஆகியவற்றின் வர்த்தகம் 1.79 சதவீதம் முதல் 4.89 சதவீதம் வரை சரிந்தன.

மற்றொரு புறம் இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் ஆதாயம் 0.77 சதவீதம் முதல் 2.36சதவீதம் வரை உயர்ந்தன. 

மும்பை பங்குச் சந்தையில் 623 பங்குகள் ஆதாயத்தை அடைந்தன. 1,041 பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன.  தேசிய பங்குச் சந்தையில் 514 பங்குகள் முன்னணியில் உள்ளன. 1,093 பங்குகள் சரிவை எதிர்கொண்டன. 

ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சென்செக்ஸ் சரிவை சந்தித்தன. 

வோடாபோன் ஐடியா பங்குகள் 3.17 சதவிதம் சரிவை எதிர்கொண்டன. ஜப்பானின் நிக்கேய் 0.45 சதவீதம் உயர்ந்தன.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top