சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

ஆரம்பத்தில் இருந்த இண்டஸ்இண்ட் வங்கி 7.5 சதவீதமும் இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னாஸ் 5.5 சதவீதமும் உயர்ந்தது. ஜீ எண்டர்டெயின்மெண்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் லார்சன்  அண்ட் டூப்ரோ 3.5 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 

சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முன்னிலையில் உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் பங்கு வர்த்தகம் வெகுவாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 710 புள்ளிகள் அதிகரித்துள்ளது.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பான வெற்றியை பெறுவோம் என்று தெரிவித்திருந்தார். 

காலை 10.00 மணியளவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ச் 710 புள்ளிகள் அதிகரித்து 39,821 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 208 புள்ளிகள் அதிகரித்து 11,946 ஆக இருந்தது. தேசிய பங்கு சந்தை பரிவர்த்தனையில் அனைத்து துறை குறியீடுகளும் நேர்மறையாக உள்ளது. 

ஆரம்பத்தில் இருந்த இண்டஸ்இண்ட் வங்கி 7.5 சதவீதமும் இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னாஸ் 5.5 சதவீதமும் உயர்ந்தது. ஜீ எண்டர்டெயின்மெண்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் லார்சன்  அண்ட் டூப்ரோ 3.5 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 

ஆனால் வேதாந்தா, ஓஎன் ஜிசி, ஹிண்டால்கோம் சன் பார்மா மற்றும் டெக்  மஹிந்திரா ஆகியவை பலவீனமடைந்தன.

அமெரிக்க -சீனா இடையேயான வர்த்தகப் போர் பதட்டங்களை அதிகரித்தன.

டோக்கியோ, சிட்னி, ஹாங்காங், ஷாங்காய் மற்றும் சியோல் ஆகியவற்றின் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளன. 

More News