Profit

சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்தன; நிஃப்டி 11,100 புள்ளிகளைத் தொட்டது

அல்ட்ரா டெக் சிமிண்ட் பங்குகள் 3.03 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூன் 30 காலாண்டு லாப வீதம் ரூ. 1,199 கோடி என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்தன; நிஃப்டி 11,100 புள்ளிகளைத் தொட்டது

ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் உள்ளன.


இந்திய பங்குச் சந்தை உயர்வுக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 284.51 புள்ளிகள் குறைந்து 37,611.87 புள்ளிகளில் உள்ளது தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 89.4 புள்ளிகள் உயர்ந்து 11,121.85 புள்ளிகளில் உள்ளது. வங்கி மற்றும் எனர்ஜி பங்குகள் சந்தைக்கு ஆதரவளித்தன.

காலை 9:18 மணியளவில் சென்செக்ஸ் 207.10 புள்ளிகள் உயர்ந்து  37,534.46 புள்ளிகளில் இருந்தன. நிஃப்டி 38.70 புள்ளிகள் உயர்ந்து 11,071.15 புள்ளிகளில் உள்ளது. 

நிஃப்டி அல்ட்ரா டெக் சிமிண்ட், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், பவர் கிரிட் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் வர்த்தகம் 1.20 சதவீதம் முதல் 2.41 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 

மும்பை பங்குச் சந்தையில் 671 பங்குகள் ஆதாயத்தை அடைந்தன. 182 பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன. தேசிய பங்குச் சந்தையில் 1,064 நிறுவனப் பங்குகள் முன்னணியில் உள்ளன. 401 நிறுவனப் பங்குகள் சரிவை எதிர்கொண்டன. 

ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி  மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் உள்ளன. 

அல்ட்ரா டெக் சிமிண்ட் பங்குகள் 3.03 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூன் 30 காலாண்டு லாப வீதம் ரூ. 1,199 கோடி என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

டி.ஹெச்.எஃப்.எல் வியாழக்கிழமை தனது கடன் மற்றும் பொறுப்புகளை எதிர்காலத்தில் தீர்க்க முடியாது என்று கூறியது. இதனால் கடனாளர்கள் அது குறித்து விரைவில் தீர்மானம் இயற்றுவார்கள் எனத் தெரிகிறது. 

எம்.எம்.சி.ஐயின் ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் பரந்த குறியீடு 0.2 சதவீதம் உயர்ந்தது. ஜப்பானின் நிக்கேய் 0.6 சதவீதமும் ஆஸ்திரேலிய பங்குகள் தட்டையாகவும், தென் கொரிய பங்குகள் 1 சதவீதமும் முன்னேறியுள்ளன. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top