Profit

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

ஏறக்குறைய 55-60 சதவீத வணிக வாகனங்கள் மற்றும் 30 சதவீத பயணிகள் கார்களுக்கு நிதியளிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடையே கடன் நெருக்கடி வாகன் உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைக்க அல்லது தற்காலிகமாக ஆலைகளை மூட வழி வகுத்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

மெட்டல் பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டன.


இந்திய பங்குச் சந்தை நேர்மறையான குறிப்புகளுடன் தொடங்கியது. ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது எதிரொலித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 213.31 புள்ளிகள் உயர்ந்து 36,903.81 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 60.2 புள்ளிகள் உயர்ந்து 10,915.70 புள்ளிகளில் உள்ளது. நிதியியல், ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பங்குகள் ஆதாயத்தை அடைந்தன. மெட்டல் பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டன. 

நிஃப்டியில் ஹெச்சிஎல் டெக், ஹீரோ மோட்டோ கார்ப், யெஸ் பேங்க், இன்ஃபோசிஸ், பார்தி இன்ஃப்ராடெல், ஆகியவற்றின் வர்த்தகம் 1.28 சதவீதம் முதல் 3.74 சதவீதம் வரை உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 528 பங்குகள் உயர்ந்துள்ளன. 406 நிறுவனப்பங்குகள் தடுமாறி வருகின்றன.தேசிய பங்குச் சந்தையில் 801 நிறுவனப் பங்குகள் உயர்ந்துள்ளன. 658 நிறுவனப் பங்குகள் சரிவை  எதிர்கொண்டன.

மஹிந்திரா & மஹிந்திரா மிகப்பெரும் அபாயத்தில் இருப்பதாக கூறியது. வரியினை குறைக்க வேண்டும் என்றும் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்று கோரியது. பணிஇழப்புகான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறியது. 

ஏறக்குறைய 55-60 சதவீத வணிக வாகனங்கள் மற்றும் 30 சதவீத பயணிகள் கார்களுக்கு நிதியளிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடையே கடன் நெருக்கடி வாகன் உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைக்க அல்லது தற்காலிகமாக ஆலைகளை மூட வழி வகுத்தது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top