Profit

சென்செக்ஸ், நிஃப்டி சரிந்தன: ஆட்டோ பங்குகள் அதிகம் நஷ்டத்தை எதிர்கொண்டன

ஹெடிஎஃஎப்சி பேங்க், லார்சன் & டூப்ரோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சென்செக்ஸில் சரிவை எதிர்கொண்டன.

 Share
EMAIL
PRINT
COMMENTS

பட்ஜெட்டில் வழங்கப்படாத சில ஆதரவு நடவடிக்கைகள் அரசிடமிருந்து சந்தை எதிர்பார்க்கிறது

இந்திய பங்குச் சந்தை சரிவுக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 435.23 புள்ளிகள் சரிந்து 39,078.16 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 128.25 புள்ளிகள் சரிந்து 11,682.90 புள்ளிகளில் உள்ளது. ஆட்டோ, வங்கி, மற்றும் எனர்ஜி பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காலை 9:21 மணியளவில் சென்செக்ஸ் 385.04 புள்ளிகள் சரிந்து 39,128.35 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 122.20 புள்ளிகள் சரிந்து 11,688.95புள்ளிகளில் இருந்தது.
  2. தேசிய பங்குச் சந்தையில் 1,284 நிறுவனங்கள் நஷ்டத்தை எதிர்கொண்டன. மும்பை பங்குச் சந்தையில் 1,088 நிறுவன பங்குகள் சரிவை எதிர்கொண்டுள்ளன. 
  3. ஹெடிஎஃஎப்சி பேங்க், லார்சன் & டூப்ரோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சென்செக்ஸில் சரிவை எதிர்கொண்டன. 
  4. பட்டியிலிடப்பட்ட நிறுவனங்களில் 25 சதவீத குறைந்தபட்ச பொது பங்குதாரர்களின் தற்போதைய வரம்பை 35 சதவீதமாக உயர்த்த பட்ஜெட் முன் மொழிந்தது. 
  5. பட்ஜெட்டில் வழங்கப்படாத சில ஆதரவு நடவடிக்கைகள் அரசிடமிருந்து சந்தை எதிர்பார்க்கிறது என்று ஜியோஜித் நிதிச் சேவைகளின் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர் கூறியுள்ளார்.
  6.  மற்ற ஆசிய சந்தைகள் பலவீனமாக இருந்தன. இது கடந்த வாரம் சாதனை அளவிலிருந்து சரிந்தது.  MSCI யின் ஆசிய - பசிபிக் பங்குகள் ஜப்பானுக்கு வெளியே 1 சதவீதத்திற்கு அதிகமாக சரிந்தன. ஜப்பானின் நிக்கேய் 0.9 சதவீதம் சரிவை எதிர்கொண்டன.
  7. சீனாவின் புளூ சிப் 1.7 சதவீதம் சரிவை எதிர்கொண்டன. ஹாங்காங்கின் ஹங் செங் 1.5 சதவீதம் சரிந்தது. தென் கொரியாவின் கொஸ்பி1.8 சதவீதம் சரிந்தன




Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top