Profit

சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து ஆதாயத்தை எட்டியுள்ளன

ஒட்டுமொத்தமாக 1,063 பங்குகள் நேர்மறையாக உள்ளன. 413 பங்குகள் எதிர்மறையாக உள்ளன. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து ஆதாயத்தை எட்டியுள்ளன

சென்செக்ஸ் 213 புள்ளிகள் அதிகரித்து 38,897.48 ஆக உள்ளது


மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 11,650புள்ளிகள் உள்ளது. டாட்டா கன்சல்டென்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்ம் கோடாக் மஹிந்திரா பேங்க், மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றை வாங்க கவனம் செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் எஃப்எம்சிஜி ஹெவிவெயிட்ஸான ஹிந்துஸ்தான் யூனிலிவர் மற்றும் ஐடிசி ஆகியவை அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. சென்செக்ஸ் 0.54 சதவீதம் அல்லது 213 புள்ளிகள் அதிகரித்து 38,897.48 மற்றும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 0.57 சதவீதம் அல்லது 57 புள்ளிகள் அதிகரித்து 11,655 ஆக உள்ளது. 

காலை 9:27 மணியளவில் சென்செக்ஸ் 0.47 சதவீதம் அல்லது 182 புள்ளிகள் அதிகரித்து 38,867 புள்ளிகளில் இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 0.49 சதவீதம் அதிகரித்து 57 புள்ளிகள் அதிகரித்து 11,655 ஆக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் அனைத்து துறை பங்குகளும் முன்னேற்றத்துடன் உள்ளன.

பிஎஸ்இ ரியால்டி இண்டெக்ஸ் 1.7 சதவீதம் ஆதாயத்தை அடைந்துள்ளது. ஐடி, மெட்டல், ஆயில் &கேஸ், நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்கள், பேங்கிக், கேபிடல் குட்ஸ் மற்றும் பேஸிக் மெட் ரீயல்ஸ் இண்டெக்ஸ்  ஆகியவற்றின் 0.5 முதல் 0.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நிஃப்டியில் சிப்லா அதிக ஆதாயத்தை அடைந்த நிறுவனமாகும். இதன் பங்கின் விலை 2.96 சதவீதம் அதிகரித்து ரூ. 536.40 ஆக உள்ளது. இண்ட்ஸ் இண்ட் பேங்க், டெக் மஹிந்திரா, யெஸ் பேங்க், இன்ஃபோசிஸ், அல்ட் ரா டெக் சிமிண்ட், இந்தியன் ஆயில் மற்றும் டிசிஎஸ் ஆகியவை ஆதாயத்தை அடைந்தன.

மற்றொரு புறம் பிரிட்டானிய இண்டஸ்ட்ரிஸ், பார்தி ஏர்டெல், டாக்டர்.ரெட்டி லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோ கார் ஆகியவை நஷ்டத்தை எதிர்கொண்டன. ஒட்டுமொத்தமாக 1,063 பங்குகள் நேர்மறையாக உள்ளன. 413 பங்குகள் எதிர்மறையாக உள்ளன. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top