Profit

உள்நாட்டு உற்பத்தி சரிவின் எதிரொலி : சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தியோகப்பூர்வ தகவல்கள் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
உள்நாட்டு உற்பத்தி சரிவின் எதிரொலி : சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிவை எதிர்கொண்டன.


ஹைலைட்ஸ்

  1. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது
  2. கடந்த 6 ஆண்டுகளை விட மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளது
  3. அரசின் வங்கிகள் இணைப்பு அறிவிப்பால் வங்கிகளின் பங்கு விலை சரிந்தது

இன்று இந்திய பங்குச் சந்தை பலவீனமான  குறிப்பில் தொடங்கின. ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் மிக குறைந்து விட்டதை காட்டியதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ச் 444.34 புள்ளிகள் சரிந்து 36,888.45 ஆக இருந்தது. மேலும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 137.4 புள்ளிகள் சரிந்து 10,885.85 புள்ளிகளில் உள்ளது. வங்கி, எரிசக்தி, ஆட்டோ, மற்றும் மெட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன. 

தெரிந்து கொள்ள வேண்டியவை 

காலை 9:44 மணியளவில் சென்செக்ஸ் 403.18 புள்ளிகள் அல்லது 1.08 சதவீதம் குறைந்திருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 120.45 புள்ளிகள் சரிந்து 10,902.8 புள்ளிகளில் இருந்தன.

நிஃப்டி குறியீட்டில் இந்தியன் ஆயில், டாடா மோட்டர்ஸ், பாரத் பெட் ரோலியம். அல்ட்ராடெக் சிமிண்ட், இந்தியபுல்ஸ் ஹவுஸிங் ஃபைன்னான்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் வர்த்தகம் 2.65 சதவீதம் முதல் 3.80 சதவீதம் வரை வர்த்தகம் செய்தன.

சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிவை எதிர்கொண்டன.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தியோகப்பூர்வ தகவல்கள் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது. இது மார்ச் 2013 முதல் மிகக் குறைவான உள்நாட்டு உற்பத்தியாகும்.   

வங்கிகளை ஒன்றிணைக்கும் முடிவினால் 12 பெரிய வங்கி பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வங்கி 1.89 சதவீதம் சரிந்தது. 

ஐடிபிஐ மூலதன ஆராய்ச்சித் தலைவர் ஏ.கே.பிரபாகர் “எந்தவொரு இணைப்பிற்கும் நேரம் எடுக்கும். முந்தைய இணைப்புகள் அவற்றின் நன்மைகள் கிடைக்க பல ஆண்டுகள் எடுத்துள்ளன. வங்கி இணைப்பு என்பது நீண்ட காலத்திற்கு நன்மையையும் குறுகிய காலத்திற்கு எதிர்மறையான விளைவுகளையும் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

திங்களன்று தனித் தரவுகளான நிலக்கரி, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்ற முக்கிய துறைகளின் வளர்ச்சி ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாகும். இது ஒரு வருடத்திற்கு முன்பு 7.3 சதவீதமாக இருந்தது. 

அமெரிக்கா ஞாயிற்றுக் கிழமை பல்வேறு வகையான சீனப் பொருட்களுக்கு 15 சதவீத கட்டணங்களை விதிக்கத் தொடங்கியது. சீனா அமெரிக்க வர்த்தக கச்சா எண்ணெய்க்கு புதிய வரிகளை விதிக்கத் தொடங்கியது. 

நேற்று விநாயக சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகள் மூடப்பட்டன. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top