சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தன: நிதித்துறை, ஆட்டோ, மெட்டல் பங்குகள் ஆதாயத்தை அடைந்தன

டிவிடெண்ட் செலுத்துதலில் பிப்ரவரியில் ஏற்கனவே ரூ. 28,000 கோடி அரசுக்கு மாற்றப்பட்டது.

சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தன: நிதித்துறை, ஆட்டோ, மெட்டல் பங்குகள் ஆதாயத்தை அடைந்தன

இன்று இந்திய பங்குச் சந்தை முன்னேற்றத்திற்கான குறிப்புகளுடன் தொடங்கின. இந்திய ரிசர்வ் வங்கி ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 199.68 புள்ளிகள் அதிகரித்து 37,693.80 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 63.2 புள்ளிகள் அதிகரித்து 11,121.05 புள்ளிகள் வரை குறைந்தது. நிதித்துறை, ஆட்டோ, மெட்டல் மற்றும் எரிசக்தி பங்குகளின் லாபம் சந்தையை ஆதரித்தன. இருப்பினும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் பலவீனமாக இருந்தன.

காலை 9:22 மணிக்கு சென்செக்ஸ் 182.04 புள்ளிகள் உயர்ந்து 36,676.16 ஆக இருந்தது. நிஃப்டி 55.50 புள்ளிகள் உயர்ந்து 11,113.35 புள்ளிகள் வரை வர்த்தகம் உயர்ந்திருந்தது.

நிஃப்டியில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி, பிரிட்டானியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றூம் அல்ட்ராடெக் சிமிண்ட் ஆகியவற்றின் வர்த்தகம் 2.19 சதவீதம் முதல் 2.87 சதவீதம் வரை உயர்ந்தது.

ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், எஸ்பிஐ  மற்றூம் எல்&டி  ஆகியவை சென்செக்ஸின் முன்னேற்றத்திற்கு அதிக பங்களிப்பை செலுத்தின. 

மும்பை பங்குச் சந்தையில் 782 பங்குகள் உயர்ந்தன. 268 பங்குகள் சரிவை எதிர்கொண்டன். தேசிய பங்குச் சந்தையில் 1,057 பங்குகள் முன்னேறியும் 430 பங்குகள் சரிவையும் எதிர்கொண்டன.

ரிசர்வ் வங்கியானது மத்திய அரசிற்கு டிவிடெணட் மற்றும் கூடுதல் உபரி தொகையை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. 1.23 லட்சம் கோடி வழங்கவுள்ளது. 

டிவிடெண்ட் செலுத்துதலில் பிப்ரவரியில் ஏற்கனவே ரூ. 28,000 கோடி அரசுக்கு மாற்றப்பட்டது

ஆசிய பங்குகள் படிப்படியாக உயர்ந்தன. ஜப்பானுக்கு வெளியே எம்.எஸ்.சி.ஐயின் ஆசிய -பசிபிக் பங்குகள் 0.3 சதவீதம் உயர்ந்தது. ஷாங்காய் 1 சதவீதம் உயர்ந்துள்ளது. தென் கொரியாவின் கோஸ்பி 0.8 சதவீதமும் ஜப்பானின் நிக்கேய் 1.1 சதவீதமும் உயர்ந்தன.

More News