Profit

சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன : வங்கி, நிதித்துறை பங்குகள் ஆதாயத்தை அடைந்தன

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீதான அதிக வரிகளை திரும்ப பெறும் என்றும், நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கான கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெறுவதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

வங்கி, நிதித்துறை மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பங்குகள் ஆதாயத்தை அடைந்தன


இந்திய பங்குச் சந்தை இன்று முன்னேற்றத்திற்கான உறுதியான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 393.76 புள்ளிகள் உயர்ந்து 37,094.92 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 10,900 புள்ளிகளிலிருந்து 11,000.55 புள்ளிகள் வரை உயர்ந்தது. வங்கி, நிதித்துறை மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பங்குகள் ஆதாயத்தை அடைந்தன. ஐடி மற்றும் மெட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன. 

நிஃப்டியில் இந்தியாபுல்ச் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஜீ எண்டர்டெயின்மெண்ட், மஹேந்திர & மஹேந்திரா மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவற்றின் வர்த்தகம் 2.01 சதவீதம் முதல் 3.70 சதவீதம் வரை உயர்ந்தன. 

ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் எஸ்பிஐ ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் உள்ளன. மும்பை பங்குச் சந்தையில் 1,071 நிறுவனப் பங்குகள் உயர்ந்தும் 406 நிறுவனப் பங்குகள் குறைந்தும் உள்ளன. தேசிய பங்குச் சந்தையில் 1,140 நிறுவனப் பங்குகள் உயர்ந்தும் 434 நிறுவனப் பங்குகள் குறைந்தும் உள்ளன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். அதன்படி வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீதான அதிக வரிகளை திரும்ப பெறும் என்றும், நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கான கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெறுவதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

சந்தை ஆய்வாளர்கள் மேலும் நடவடிக்கைகள் தேவைப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலீட்டு வங்கி நிறுவனமான ஜே.எம். பைனான்சியல் தொழிற்துறை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளித்திருந்தாலும் அது போதுமானதாக இருக்காது. நிழல் வங்கிகளின் கடன் சுழற்சிக்கு புதிய தொடக்கத்தை வழங்க கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்று கூறியுள்ளது. 

அமெரிக்கா -சீனா வர்த்தக் போரின் சமீபத்திய சால்வோ பிரச்னை உலகப் பொருளாதாரத்தில் நம்பிக்கையை உலுக்கியதால் மற்ற ஆசிய சந்தைகளில் பங்குகள் சரிவை தொட்டன. ஜப்பானுக்கு வெளியே ஆசிய- பசிபிக் பங்குகளின் 2.0 சதவீதமும் ஆஸ்திரேலியா 1.5 சதவீதமும் சரிந்தன. ஜப்பானின் நிக்கேய் 2.3 சதவீதமும் ஷாங்காய் புளூ சிப்ஸ் 1.2 சதவீதமும் சரிந்தன.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top