Profit

சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்தன : ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் சரிவை எதிர்கொண்டன

Sensex today: ஹெச்டிஎஃப்சி வங்கி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியி மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டன. 2.75 சதவீதமாக சரிந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்தன : ஹெச்டிஎஃப்சி  வங்கி பங்குகள் சரிவை எதிர்கொண்டன

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி தொடர்ந்து 3வது நாளாக சரிந்து வருகிறது. ஹெசிடிஎஃப்சி, ஐடிசி, பஜாஜ் ஃபைன்னான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சரிவை எதிர்கொண்டன.  மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 348புள்ளிகள் சரிந்து 38,000 புள்ளிகளில் உள்ளது தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 11,400 புள்ளிகளுக்கும் கீழே  உள்ளது. 

காலை 9:23 மணியளவில் சென்செக்ஸ் 0.71 சதவீதம் அல்லது 271 புள்ளிகள் சரிந்து 38,065 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 0.74சதவீதம் அல்லது 84 புள்ளிகள் சரிந்து 11, 335 புள்ளிகளில் உள்ளது. 

தேசிய பங்குச் சந்தையால் தொகுக்கப்பட்ட அனைத்து 11 துறை அளவீடுகளும்ம் நிஃப்டி ரியால்டி குறியீட்டில் 2.2 சதவீத வீழ்ச்சியால் குறைந்த வர்த்தகத்தில் இருந்தன. நிஃப்டி வங்கி, நிஃப்டி தனியார் வங்கி, நிஃப்டி நிதியியல் சேவை மற்றும் நிஃப்டி எஃப். எம்.சி.ஜி குறியீடுகளும் தலா 0.9 முதல் 1.8 சதவீதம் வரை குறைந்து விட்டன. 

ஹெச்டிஎஃப்சி வங்கி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியி மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டன. 2.75 சதவீதமாக சரிந்துள்ளது. பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், பாரத் பெட் ரோலியம், இண்டஸிண்ட் பேங்க், கோட்டக் மஹிந்திர பேங்க், ஈகர் மோட்டார்ஸ், கோல் இந்தியா, அதானி பார்ட்ஸ் மற்றும் அல்ட்ரா டெக் சிமிண்ட் ஆகியவை நிஃப்டியில் சரிவை சந்தித்தன.

மற்றொரு புறம் வேதாந்தா, டாடா மோட்டர்ஸ், பாரதி இன்ஃப்ராடெல், யெஸ் பேங்க், சன் பார்மா மற்றும் மாருதி சுசுகி ஆகியவை குறிப்பிடத்தக்க லாபத்தை பெற்றன. மும்பை பங்குச் சந்தையில் 1,227 பங்குகள் சரிந்துள்ளன. 320  நிறுவனப் பங்குகள் முன்னேறியுள்ளன. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top