Profit

சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன: நிதித்துறை மற்றும் மெட்டல் பங்குகள் உயர்ந்துள்ளன

நிஃப்டியில் ஹிண்டல்கோ, கெயில், வேதாந்தா, டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் ஃபைன்னான்ஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 1.64 சதவீதம் முதல் 3.59 சதவீதம் வரை உயர்ந்தன

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன: நிதித்துறை மற்றும் மெட்டல் பங்குகள் உயர்ந்துள்ளன

ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சென்செக்ஸில் ஆதாயத்தை அடைந்தன.


இரண்டு நாள் நஷ்டத்திற்கு பின் இந்திய பங்குச் சந்தை இன்று முன்னேற்றத்திற்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 250.06 புள்ளிகள் உயர்ந்து 37,318.99 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 76.55 புள்ளிகள் அதிகரித்து 11,024.85 புள்ளிகளில் உள்ளது. நிதித்துறை மற்றும் மெட்டல் பங்குகள் சந்தையை ஆதரித்தன. ஐடி பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டன. காலை 10.01 மணியளவில் சென்செக்ஸ் 184.42 புள்ளிகள் அதிகரித்திருந்தன. நிஃப்டி 58.25 புள்ளிகள் அதிகரித்திருந்தன. 

நிஃப்டியில் ஹிண்டல்கோ, கெயில், வேதாந்தா, டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் ஃபைன்னான்ஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 1.64 சதவீதம் முதல் 3.59 சதவீதம் வரை உயர்ந்தன.

ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சென்செக்ஸில் ஆதாயத்தை அடைந்தன.

ஜூன் 30 உடன் முடிந்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை அரசு வெளியிட்டது. ராய்ட்டர்ஸ் உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதமாக இருக்குமென கணித்திருந்தது. மற்ற  ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் உயர்ந்துள்ளன. ஏனெனில் சீனா அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

எம்.எஸ்.சி.ஐயின் ஆசிய பசிபிக் பங்குகளின் பரந்த குறியீடானது ஜப்பானுக்கு வெளியே 0.6 சதவீதம் உயர்ந்தது. ஜப்பானின் நிக்கேய் 1 சதவீதமும்  தென்கொரியாவின் கோஸ்பி 1.5 சதவீதமும் ஆஸ்திரேலிய பங்குகள் 0.9 சதவீதமும் உயர்ந்தன.



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top