ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை வர்த்தகம் 14 சதவீதம் உயர்வு!!

அடுத்து வரும் வாரங்களில் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை வர்த்தகம் 14 சதவீதம் உயர்வு!!

நாளை மகாராஷ்டிரா தினம் கடைபிடிக்கப்படுவதால் பங்கு வர்த்தகத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் 14 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த உயர்வு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். 

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் உலக வர்த்கம் எழுச்சிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்காக ரூ. 1.70 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தின் இறுதி நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவு பெற்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 997 புள்ளிகள் அல்லது 3.05 சதவீதம் அதிகரித்து 33,718 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 இன்டெக்ஸ் 307 புள்ளிகள் அல்லது 3.21 சதவீதம் உயர்ந்து 9,860 புள்ளிகளாகவும் முடிந்தது.

Newsbeep

அடுத்து வரும் வாரங்களில் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.டி.பி.ஐ. கேபிடலின் தலைவர் ஏ.கே. பிரபாகர் கூறுகையில், ''அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறாலாம். கொரோனா பாதிப்பால் இன்னும் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7,500 புள்ளிகளுக்கு கீழாக செல்லவும் வாய்ப்பு உள்ளது  '' என்று தெரிவித்தார். 

நாளை மகாராஷ்டிரா தினம் கடைபிடிக்கப்படுவதால் பங்கு வர்த்தகத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.