Profit

சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 5.5 சதவீத வீழ்ச்சியால் அனைத்து துறை பங்குகளும் நஷ்டமடைந்தன. ரியால்டி, ஆட்டோ, வங்கி, நிதியியல் சேவைகள், மீடியா மற்றும் தனியார் துறை பங்குகள் தலா 2 முதல் 3 சதவீதம் வரை சரிந்தன.

 Share
EMAIL
PRINT
COMMENTS

மும்பை பங்கு சந்தையில் 1,431 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்த்துள்ளன.


ஹைலைட்ஸ்

  1. சென்செக்ஸ் 38,850ஐ விட சரிந்தது
  2. நிஃப்டியி 45 நிறுவனப் பங்குகள் சரிவை எதிர்கொண்டன
  3. சென்செக்ஸில் 1,431 நிறுவன பங்குகள் சரிவை எதிர்கொண்டன

மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை பட்ஜெட் அறிவித்த பின் இரண்டாவது நாள் நாளாக சரிவை எதிர்கொண்டுள்ளது.  2019-20 ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் பட்டியலிடப்பட்ட பங்குகளை அதிகரிக்க முன்மொழிந்தார். தற்போதைய வரம்பை 25 சதவீதத்திலிருந்து தத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு செபியிடம் கேட்டுள்ளேன்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் உரையில் கூறினார். சென்செக்ஸ் கிட்டத்தட்ட  847 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி 11,600 புள்ளிகள்  குறைந்துள்ளது. சென்செக்ஸ்  847 புள்ளிகள் சரிந்து  38,666 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டி 268.5 புள்ளிகள் வரை சரிந்து 11,600 புள்ளிகளில் உள்ளது.

ஆட்டோ மற்றும் வங்கி பங்குகள் மிக மோசமாக செயல் திறன் காரணமாக கடும் சரிவை எதிர்கொண்டன. 

காலை சரிந்தன1:12 மணிக்கு சென்செக்ஸ் 1.73 சதவீதம் அல்லது 682.03 புள்ளிகள் சரிந்து 38,831.36 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 1.84 சதவீதம் அல்லது 217.60 புள்ளிகள் குறைந்து 11,593.55 ஆக இருந்தது. 

“பட்ஜெட் அறிவிப்புகளால் சந்தைகள்  ஏமாற்றமடைந்து உள்ளதாகத் தெரிகிறது” ஐடிபிஐ மூலதன ஆராய்ச்சித் தலைவர் ஏ.கே.பிரபாகர் NDTVக்கு பதிலளித்தார்.

நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 5.5 சதவீத வீழ்ச்சியால் அனைத்து துறை பங்குகளும் நஷ்டமடைந்தன. ரியால்டி, ஆட்டோ, வங்கி, நிதியியல் சேவைகள், மீடியா மற்றும் தனியார் துறை பங்குகள் தலா 2 முதல் 3 சதவீதம் வரை சரிந்தன. 

மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் நிஃப்டி மிட்கேப் 100 இண்டெக்ஸ் மற்றூம் 100 இண்டெக்ஸ் ஆகியவை முறையே 2.44 சதவீதம் மற்றும் 2.27 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.  நிஃப்டியில் 45 நிறுவனப் பங்குகள். ஹீரோ மோட்டோகார்ப் 4.8 சதவீதம் சரிந்தது.

ஓ.என்.ஜி.சி. பஜாஜ் நிதி, இந்தியன் ஆயில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், எண்டிபிசி, டாடா மோட்டார்ஸ், பாரத் பெட் ரோலியம், மாருதி சுசுகி, ஐசிஐசிஐ  வங்கி மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை 2.77 சதவீதம் முதல் 4.64 சதவீதம் வரை சரிந்தன. 

மற்றொரு புறம் யெஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி இன்ஃப்ராடெல், டிசிஎஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை முக்கிய லாபத்தை பெற்றன. 

மும்பை பங்கு சந்தையில் 1,431 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்த்துள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளியன்று முறையே 0.99 சதவீதம் மற்றும் 1.14 சதவீதம் சரிவை சந்தித்தன. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top