This Article is From Mar 09, 2020

கொரோனா பீதி: சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிந்து பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த அச்ச உணர்வு காரணமாக, முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பங்குகளில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கொரோனா பீதி: சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிந்து பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிந்து பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சி

ஹைலைட்ஸ்

  • யெஸ் வங்கியின் பங்குகள் 25 சதவீதம் குறைந்துள்ளன.
  • இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து டாலருக்கு 74 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
  • கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வர்த்தகம் மந்தமடைந்துள்ளன
உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த அச்ச உணர்வு காரணமாக, முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பங்குகளில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

உலகெங்கிலும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வர்த்தகம் மந்தமடைந்துள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று பெரும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் துவக்கின. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 1459.52  புள்ளிகள் சரிந்து, 37,011.09 ஆக வர்த்தகம் ஆனது. நிப்டியும் 441.60 புள்ளிகள் குறைந்து 10,827.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த அச்ச உணர்வு காரணமாக, முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பங்குகளில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர். 

எனினும், பங்குச்சந்தைகள் வர்த்தகத்தின் முதல் ஒருமணி நேரத்திற்குள் ஏற்பட்ட சில இழப்புகளைக் குறைத்தன. காலை 9.47 மணிக்கு சென்செக்ஸ் 1,064.79 புள்ளிகள் அல்லது 2.77 சதவீதம் குறைந்து 37,405.82 ஆகவும், நிஃப்டி 324.80 புள்ளிகள் அல்லது 2.88 சதவீதம் சரிந்து 10,944.20 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

நிஃப்டியில் உள்ள 50 பங்குகள் அனைத்தும் அந்த நேரத்தில் இழப்புகளுக்கு எதிராகப் போராடின. யெஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் ஆகியவை 5.16 சதவீதத்திற்கும் 25 சதவீதத்திற்கும் குறைவாக வர்த்தகம் செய்தன.

நேற்றைய தினம் யெஸ் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏப்.3ம் தேதி வரை ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என சில விதிவிலக்குகளுடன் மத்திய அரசு வரம்பு விதித்த நிலையில், இன்று காலை யெஸ் வங்கியின் பங்குகள் 25 சதவீதம் குறைந்துள்ளன. 

தேசிய பங்குச் சந்தையில் உள்ள 11 துறைகளில் அனைத்தும் வீழ்ச்சியடைந்தன, வங்கி - குறிப்பாக அரசு நடத்தும் வங்கிகள், ஆட்டோமொபைல் மற்றும் உலோகப் பங்குகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மிகப் பெரிய வங்கிகளில் 12 பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வங்கி குறியீடு அந்த நேரத்தில் 4.51 சதவீதம் சரிந்தது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் முறையே 3.44 சதவீதம் மற்றும் 2.93 சதவீதம் குறைந்துள்ளன. ஆரம்ப வர்த்தகத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பிரிவுகளின் அளவுகள் முறையே 4.16 சதவீதம் மற்றும் 3.25 சதவீதம் குறைந்துவிட்டன.

பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அக்.2018ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து டாலருக்கு 74 ரூபாய் என்ற அளவை நோக்கிச் செல்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இது அண்டார்டிக்காவைத் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 95,000 பேர் வரை அபாயகரமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.