Profit

550 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த பங்கு சந்தை: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

Stock Market Today: சென்செக்ஸ் 561.91 புள்ளிகள் சரிந்தும் நிஃப்டி 185 புள்ளிகள் சரிந்தும் இருந்தன

 Share
EMAIL
PRINT
COMMENTS

Share Market Today: அனைத்து துறைப் பங்குகளும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வங்கிகள், பார்மா, மற்றும் மெட்டல் பங்குகள் சரிந்தன.


உள்நாட்டு பங்கு சந்தைகள் (Share Market) இன்று சரிவை சந்தித்தன. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 35,204.66புள்ளிகளில் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 10,508.70 புள்ளிகளில் தொடங்கியது.வெள்ளி மாலை சென்செக்ஸ் 35,673புள்ளிகளுடனும் நிஃப்டி 10,693.70 புள்ளிகளிலும் முடிவடைந்தது.

காலை 9.17 மணியளவில் சென்செக்ஸ் 498.68 புள்ளிகள் சரிந்து 35,178.57 ஆக இருந்தது. நிஃப்டி 154.25 புள்ளிகள் சரிந்து 10,539.45 ஆக இருந்தது. நிஃப்டியில் 30 நிறுவன பங்குகள் சரிந்தன.

  1. இந்த அறிக்கையை எழுதும்போது சென்செக்ஸ் 561.91 புள்ளிகள் சரிந்தும் நிஃப்டி 185 புள்ளிகள் சரிந்தும் இருந்தன.
  2. ட்ரேடிங் 2.48-3.72 சதவீதமாக குறைந்தது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், அதானி பார்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய  நிஃப்டியின் முதல் 5 நஷ்டமடைந்த நிறுவனங்கள் ஆகும்.
  3. அனைத்து துறைப் பங்குகளும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வங்கிகள், பார்மா, மற்றும் மெட்டல் பங்குகள் சரிந்தன.
  4. உலகளாவிய பங்குசந்தைகளான (Share Market) அமெரிக்காவின் ஈக்யூட்டி பங்குகள் ஆசியாவின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன. வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே பதட்டங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான வியாபார ஒப்பந்தங்களை விலக்கி வைக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
  5. கமாடிட்டி மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலைஉயர்ந்தது. கச்சா எண்ணெய்யின் உற்பத்தி அமைப்பான ஓபிஇசி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைத்தன. 1.2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் சப்ளை குறைக்கப்பட்டது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.8 சதவீதம் உயர்ந்து 62.13 டாலராக இருந்தது.
  6. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.41 ஆக சரிந்தது. நவம்பர் 20 அன்று வெள்ளி மாலை 70.80 ஆக முடிந்தது.
  7. பத்து ஆண்டு பத்திரக் கடன் 7.46 சதவீதம் முதல் 7.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  8. வெள்ளிக்கிழமை, முக்கியமான ஆளும் கட்சியான பாஜக எக்ஸிட் போலில் ஆட்சியை விட்டு வெளியேறும் என்று தெரிவிக்கப்பட்டது.
  9. தேசிய பங்கு சந்தை  தரவுப்படி உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இடம் ரூ.817.4 மற்றும் 242.56 கோடியாக விற்பனை செய்யப்பட்டது. 


Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top