Profit

சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

நிஃப்டியில் ஆதாயம் பெற்ற நிறுவனங்களாக டாடா மோட்டர்ஸ் டிசிஎஸ், கோல் இந்தியா ஹிண்டல்கோ மற்றும் எச்சிஎல் டெக் ஆகியவற்றின் வர்த்தகம் 1.48 சதவீதம் முதல் 4.19 சதவீதம் வரை உயர்ந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

Stock market updates: மெட்டல், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆட்டோ பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ளன.


இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 111.79 புள்ளிகள் உயர்ந்து 38.878.90 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 33.95புள்ளிகள் உயர்ந்து 11,6777.40 புள்ளிகளில் உள்ளது.  மெட்டல், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆட்டோ பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ளன. காலை 9:35 மணியளவில் சென்செக்ஸ் 51.59 புள்ளிகள் அதிகரித்து 38,818.70 புள்ளிகளில் இருந்தது.  தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 21.20 புள்ளிகள் அதிகரித்து 11,664.65 புள்ளிகளில் இருந்தது. 

நிஃப்டியில் ஆதாயம் பெற்ற நிறுவனங்களாக டாடா மோட்டர்ஸ் டிசிஎஸ், கோல் இந்தியா ஹிண்டல்கோ மற்றும் எச்சிஎல் டெக் ஆகியவற்றின் வர்த்தகம் 1.48 சதவீதம் முதல் 4.19 சதவீதம் வரை உயர்ந்தது. டிசிஎஸ், ஐடிசி மற்றும் டாட்டா மோட்டர்ஸ் ஆகியவை சென்செக்ஸ் அதிக ஆதாயத்தைப் பெற்றவையாகும். 

வெள்ளிக்கிழமை, மார்ச் மாதத்தில்  நுகர்வோர் பணவீக்கம் 2.86 சதவீதமாக இருந்தது என்று பொருளாதார தரவுகள் வெளியாகியிருந்தந்தன. பிப்ரவரி மாதம் 2.57 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு மத்திய வங்கியின் பணவியல் கொள்கையை மேலும் எளிதாக்குவது என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

மொத்த விலை பணவீக்கம் குறித்த தகவல்களை நாளை வெளியிடவுள்ளது. 

கடந்த வெள்ளியன்று டிசிஎஸ், இன்ஃபோசிஸ் காலாண்டு வருவாய் அறிவித்த பிறகு டிசிஎஸ் ஆரம்ப வர்த்தகத்தில் 3.65 சதவீமாக உயர்ந்தது. இன்ஃபோசிஸ் 4.70 சதவீத சரிவைச் சந்தித்தது. 

உள்நாட்டு சந்தைகள் ஆசிய நாடுகளிலிருந்து நேர்மறை குறிப்பை எடுத்துக் கொண்டன.  அமெரிக்க  கருவூல செயல் ஸ்டீவன் முன்ஸின் அமெரிக்கா சீனாவின் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாக கூறினனார். அதே நேரத்தில் சீன ஏற்றுமதி மற்றும் வங்கி கடன் தரவு உலகப் பொருளாதாரத்தில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.



Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections. Election results will be out on May 23.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top