Profit

சென்செக்ஸ் 70 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது

நிஃப்டியில் அல்ட் ரா டெக் சிமிண்ட், யெஸ் பேங்க், க்ராஸிம் மற்றும் பாரத் பெட் ரோலியம் பங்குகள் ஆதாயத்தில் முன்னணியில் உள்ளன. வர்த்தகம் 1.40 சதவீதம் முதல் 2.97 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 70 புள்ளிகள் மட்டுமே  உயர்ந்தது

நிஃப்டி 30.5 புள்ளிகள் உயர்ந்து 11,756.65 புள்ளிகளில் உள்ளது.


இந்திய பங்குச் சந்தை ஆதாயத்திற்கும் நஷ்டத்திற்கும் இடையே ஊடாடியது பின் சற்று முன்னேற்றத்தைக் கண்டது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்  73.91 புள்ளிகள் உயர்ந்து 39,128.59 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 30.5 புள்ளிகள் உயர்ந்து 11,756.65 புள்ளிகளில் உள்ளது. யெஸ் பேங்க் பங்குகள் முன்னேறியுள்ளது. ஆட்டோ பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டுள்ளது. பங்குச் சந்தை இறுக்கங்களுடனே முன்னேறி வருகிறது. 1.3 சதவீதம் அளவு மூன்று நாள் உயர்ந்துள்ளது. காலை 9:47 மணியளவில் சென்செக்ஸ் 3.98 புள்ளிகள் மட்டுமே உயர்ந்திருந்தது. நிஃப்டி 11.35 புள்ளிகள் மட்டுமே உயர்ந்திருந்தது. 

நிஃப்டியில் அல்ட் ரா டெக் சிமிண்ட், யெஸ் பேங்க், க்ராஸிம் மற்றும் பாரத் பெட் ரோலியம் பங்குகள் ஆதாயத்தில் முன்னணியில் உள்ளன. வர்த்தகம் 1.40  சதவீதம் முதல் 2.97 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.  மற்றொரு புறம் பார்தி இன்ஃப்ராடெல், மாருதி சுசுகி, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை வர்த்தகத்தில் தடுமாறி வருகிறது. இதன் வர்த்தகம் 0.89 சதவீதம் முதல் 2.90 சதவீதமென்ற அளவிலேயே உள்ளது. 

ஹெச்டிஎஃப்சி, லார்சன் & டர்போ மற்றும் ஐடிசி ஆகியவை சென்செக்ஸில் முன்னிலையில் உள்ளது. எம் எஸ்சிஐ ஆசிய பசிபிக் பங்குகள் ஜப்பானுக்கு வெளியே 0.2 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை 0.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

(With inputs from Reuters)



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top