Profit

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

மற்றொரு புறம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பங்குகள் உயர்ந்துள்ளன. அதன் பங்குகள் 3.07 சதவீதம் உயர்ந்து 1,385.00 ஆக உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 333.2 புள்ளிகள் சரிந்தது


இந்தியப் பங்குச் சந்தை காலையில் ஆதாயத்துடன் தொடங்கினாலும் அதன் பின் சரிவை எதிர்கொண்டது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 333.2 புள்ளிகள் சரிந்து 39,154.25 புள்ளிளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 117.65 புள்ளிகள் சரிந்து 11,856 புள்ளிகளில் உள்ளது. வங்கி, மெட்டல் மற்றும் மீடியா பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. எனர்ஜி  பங்குகளின் ஆதாயம் பங்குச் சந்தையின் நஷ்டத்தைக் குறைத்துள்ளது. 

காலை 10.33 மணியளவில் சென்செக்ஸ் 114. 55 புள்ளிகள் சரிந்து 39,161.09 புள்ளிகளில் இருந்ததுருந்தது. நிஃப்டி 39.15 புள்ளிகள் சரிந்து 11,748.00 புள்ளிகளில் இருந்தது.

இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், பார்தி ஏர்டெல், யெஸ் பேங்க், ஹிண்டல்கோ மற்றும் வேதாந்தா ஆகியவற்றின் வர்த்தகம் 2.68 சதவீதம் முதல் 4.44 சதவீதம் வரை சரிந்தது.

ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 34.01 சதவீதம் வரை சரிந்தது. ஜெட் ஏர்வேஸ் தன் செயல்பாடுகளை இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது. தேசிய பங்குச் சந்தை பங்குகள் ரூ.158.70 ஆக இருந்தது. 

மற்றொரு புறம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பங்குகள் உயர்ந்துள்ளன. அதன் பங்குகள் 3.07 சதவீதம் உயர்ந்து 1,385.00 ஆக உள்ளது. 

ஜப்பானுக்கு வெளியே ஆசிய -பசிபிக் சந்தைகள் 0.08 சதவீதம் உயர்ந்துள்ளது.



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top