Profit

சிறிய மாற்றத்துடன் சென்செக்ஸ், நிஃப்டி; ஐடி பங்குகள் ஆதாயமடைந்தன

இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைன்னாஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹிண்டலோ, டெக் மஹிந்திரா, டாக்டர். ரெட்டி லேப்ஸ் மற்றும் கேசிஎல் டெக்னலாஜிஸ்  நிஃப்டியில் ஆதாயத்தை அடைந்துள்ளன

 Share
EMAIL
PRINT
COMMENTS
சிறிய மாற்றத்துடன் சென்செக்ஸ், நிஃப்டி; ஐடி பங்குகள் ஆதாயமடைந்தன

நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 11,537 புள்ளிகளில் உள்ளது.


இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சிறிய மாற்றத்துடன் தொடங்கியது. இன்ஃபோசிஸ், எச்.டி.எஃப்.சி, லார்சன் & டர்போ, எச்டிஎஃப்சி பேங்க், மற்றும் ஐடிசி ஆகியவற்றின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடாக் மஹேந்திரா பேங்க், மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவற்றில் அழுத்தம் அதிகரித்துள்ளது. காலை 9:20 மணியளவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 13 உயர்ந்து 38,376 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 11,537 புள்ளிகளில் உள்ளது. நேற்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நீண்ட நேர உயர்வுடன் இருந்தது. 

அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்கு வந்துள்ள நிலையில் 2,132 கோடி ரூ முதலீடு செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் 12 நிறுவனங்கள் குறைந்த அளவு வர்த்தகத்தையே பெற்றுள்ளது. ஆயில் & கேஸ் பங்குகள் 1.3 சதவீதம் குறைந்துள்ளது. எனர்ஜி, ஆட்டோ, கன்ஸ்யூமர் டிஸ்கிரியேஷனரி குட்ஸ் & சர்வீசஸ் பங்குகள் 0.5 மற்றும் 1 சதவீதம் வரை குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் ஐடி பங்குகள் 1 சதவீதம் அதிகரித்தது.  

இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைன்னாஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹிண்டலோ, டெக் மஹிந்திரா, டாக்டர். ரெட்டி லேப்ஸ் மற்றும் கேசிஎல் டெக்னலாஜிஸ்  நிஃப்டியில் ஆதாயத்தை அடைந்துள்ளன. ஜீ எண்டர்டெயின்மெண்ட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், கோல் இந்தியா, எண்டிபிசி, ஓஎன்ஜிசி, மற்றும் பஜாஜ் ஆட்டோ பின் தங்கியுள்ளது

ஜெட் ஏர்வேயின் பங்குகள் 6.59 சதவீதம் சரிந்து ரூ. 213.95 ஆக உள்ளது. நீண்ட காலம் கடன் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மத்திய அரசு அவசர கால மீட்டிங்க் நடந்தது. பயணிகள் தங்களின் பணத்தை திரும்ப கேட்டு வற்புறுத்தி வருகின்றனர். பைலட்ஸ் கொடுப்படதா சம்பளத்திற்காக போராடி வருகின்றனர். 



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top